ஹாபிஸ் நசீரின் பொய்களால் கவலை: உதுமாலெப்பை
தேசிய காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர்
அதாஉல்லா ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொள்வதற்கு உதுமாலெப்பை பேசிக்கொண்டிருக்கிறார் என கிழக்கு மாகாண முதலமைச்சர் அண்மையில் தெரிவித்த கருத்து அப்பட்டமான பொய்யாகுமென கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ் உதுமாலெப்பை தெரிவித்தார்.
தேசிய காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் அதாஉல்லா ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொள்வதற்கு உதுமாலெப்பை பேசிக்கொண்டிருக்கிறார் என கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகங்களுக்கு (7) விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஒரு ஹாபிஸாக இருந்துகொண்டு பகிரங்கமாக பொய்களையே பேசி வருகின்றார். இது குறித்து கவலையடைய வேண்டியுள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகளினால் முஸ்லீம் சமூகம் இன்றய அரசியலிலும், பிற சமூகத்தின் மத்தியிலும் தலை குணிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண மூவின சமூகங்களினது பிரதிநிதிகளின் ஆதரவுடனேயே கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட் அதிகாரத்திற்கு வந்தவர். இதனை மறந்து ஸ்ரீ.மு. காங்கிரஸ் கட்சியினதும், தனதும் நலனுக்காக கிழக்கு மாகாண சபையையும், அதன் அதிகாரிகள் சிலரையும் தவறான முறையில் வழிநடத்திச் செல்கின்றார்.
பொறுப்பு வாய்ந்த ஒரு முதலமைச்சர் மட்டுமின்றி முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவருமாக இருந்து கொண்டு அரசியலுக்காக பொய்களைக் கூறிவருவது அருவருக்கத்தக்க விடயமாகும். குர்ஆன், ஹதீஸை யாப்பாகக் கொண்டமைக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் சமூகத்திற்கு முன்னுதாரணமானவர்களாக செயற்படுவதிலிருந்து தவறி அரசியல் சுயலாபங்களுக்காக பொய்களையும், ஏமாற்று அரசியலையும் செய்து வருவது சமூகத்திற்கு செய்யும் பாரிய துரோகமாகும்.
தமிழ் சமூகத்தின் பிரச்சினைகள், மக்களின் அபிலாசைகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்ற அதேவேளை வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ‘எழுக தமிழ்’ மக்கள் போராட்டங்களையும், மாணசபையையும் முறையாக வழிநடத்தி அந்த சமூகத்தின் உணர்வுகளை மதித்து செயற்பட்டு வருகின்றார்.
மேலும் வடக்கு மாகாண சபை அந்த மக்களுக்கான தீர்வுத் திட்டம், முன்யோசனைகளையும் முன்வைத்து பிரேரணைகளை நிறைவேற்றியுள்ள சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாண சபையினால் எந்தவிதமான தீர்வுத்திட்ட முன்யோசனைகளும் இதுவரை முன் வைக்கப்படவில்லை. இதேவேளை அரசாங்கம் கொண்டு வந்த விசேட அபிவிருத்தி சட்ட மூலத்தை வடக்கு மாகாண சபை உட்பட 8 மாகாண சபைகளும் நிராகரித்துள்ள நிலையில் கிழக்கு மாகாண சபை அதனை திருத்தம் செய்து வழங்குமாறு கோரியுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டுவருவதற்கு பக்கபலமாக இருந்த சிறுபான்மை சமூகத்தினரின் பிரச்சினைகளை அரசாங்கம் பொருட்படுத்தாமலேயே இருந்து வருகின்றது. இது விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் என்ற வகையில் எதுவேமே பேசாமலும், வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான அதிகாரங்களையாவது வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தாமலும் கிழக்கு மாகாண முதலமைச்சர் இருந்து வருவது கிழக்கு மாகாணத்திலுள்ள மூவின சமூகத்திற்குமான வரலாற்றுத் துறோகமாகவே அமையப்போகின்றது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் முன்மாதிரியான அரசியலை செய்து காட்டிச் சென்றுள்ளார். அவர் விட்டுச் சென்று அரசியல் வழி முறைகளை குழி தோண்டிப் புதைப்பதற்கு மாத்திரமின்றி அவரால் விட்டுச் சென்ற தாருஸ்ஸலாம் உள்ளிட்ட பல கோடி ரூபாய் பெறுமதியான அசையாச் சொத்துக்களை தனிப்பட்ட சிலர் சூரையாடுவதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளை மக்கள் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Comments
Post a Comment