வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினை அப் பிரதேச அரசியல்வாதிகளின் கவலையீனமே
(ihzana fareed)
கிழக்கு மாகாண வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினை தற்போது அரசியல் மயப் படுத்தப்பட்டுள்ளது மிகவும் கவலைக்குரிய விடயம். உண்மையில் இப் பிரச்சினை அப்பிரதேசத்தினை பிரதி நிதிப் படுத்தும் அரசியல் வாதிகளின் பொறுப்பின்மையே இவை எல்லாவற்றுக்கும் காரணம் . பட்டதாரிகளுக்கு அரசாங்கத் தொழில் கொடுக்கபட வேண்டும்
என்றால் அரசாங்க வரவு செலவு திட்டத்தில் திறை சேரியால் அதற்கான நிதி ஒதுக்கப் பட வேண்டும் . இந்த நிதி ஒதுக்கீடு அப் பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்கள் , மாகாண சபை முதல் அமைச்சார் என்போர் அரசாங்க வரவு செலவு திட் டம் தயாரிக்கும் போது வேலை வாய்ப்பு கொடுப்பதுக்கான அறிக்கை சமர்பிக்கப் படவேண்டும் , ஆனால் இவர்கள் அவ்வாறு சமர்பிக்கத் தவறியதினால் இதற்கு இவ் வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்க பட வில்லை
ஆகையால் இவர்களுக்கு தொழில் கொடு பட வாய்ப்பு இல்லை. மேலும் இவர்கள் அரச துறையை மட்டும் நம்பி இருக்காமல் தனியார் துறைகளிலும் வேலை வாய்ப்பு தேடினால் ஓரளவு இப் பிரச்சினையினை குறைக்கவும் வாய்ப்பு உண்டு , எதிர்வரும் காலங்களிலாவது இவ் அரசியல் வாதிகள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என தேசிய ஜன நாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா கருத்து வெளியிட்டார்.


Comments
Post a Comment