தனியார் பல்கலை விவகாரம்; நாட்டு நலனுக்கு முக்கியத்துவம்; ஜனாதிபதி
இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில் நாட்டு நலனைக் கருத்திற்கொண்டே இவ்விவகாரத்துக்கு தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
மாலபே தனியார் பல்கலைக்கழக விவகாரம் தொடாபில் இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கைகளின் பின்னணியில் இது குறித்து ஆராய விசேட குழுவொன்றை நியமித்துள்ள ஜனாதிபதி அனைத்து தரப்புடனும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மேலும் சில தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.


Comments
Post a Comment