மூதூரில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு


கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான அல்ஹாஜ் ஜே.எம்.லாகீர் அவர்களின் 2016 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக மூதூர் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பள்ளிவாசல்களில் கடமை புரியும் (40) ஹதீப்மார்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் (சைக்கிள்) விநியோகிக்கும் நிகழ்வு நேற்று (24) கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் வழிகாட்டலில் முன்னால் பிரதேச தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ் தலைமையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் மக்கள் பணிமனை காரியலயத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் விருந்தினர்களாக மூதூர் பிரதேச சபை செயலாளர் ஏ.டபிள்யு.ஹில்மி,முன்னால் பிரதேசசபை உறுப்பினர்களான பி.டி.எம்.பைசர், கே.பி.ரசாக்,பி.கே.கலீல், திருமண விவாக பதிவாளர் வை.லாபீர் , இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.சி.நபிகான் , ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் தோப்பூர் மத்திய கிளை உறுப்பினர்கள், கிண்ணியா பிரதேச கிளை உறுப்பினர்கள், தம்பலகாமம் பிரதேச கிளை உறுப்பினர்கள் , மூதூர் கிளை குழு தலைவர்கள், உறுப்பினர்கள், மூதூர் பள்ளிவாசல்களின் சம்மேளனத் தலைவர்கள் ,உறுப்பினர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து சிறபித்தார்கள்.


Comments