திருகோணமலை: விளையாட்டு சீருடைகள் வழங்கி வைப்பு


கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹீரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து இருந்து பால நகர் யங்ஸ்டார் விளையாட்டு கழக வீரர்களுக்கான சீருடைகள் நேற்று புதன்கிழமை (8) வழங்கப்பட்டது .

இந் நிகழ்வு பால நகர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளைக்குழு தலைவர் கே.பி.றஸாக் நாநா முன்னால் முதூர் பிரதேச சபையின் உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது .

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹீர் மற்றும் மூதூர் பிரதேச சபையின் முன்னால் தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ் ,எம்.பி.எம்.மஹ்றூப் மற்றும் பல கழக வீரர்கள் ,பொதுமக்கள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

Comments