இன்று நள்ளிரவில் நிர்ணயமாகும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை!


இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டு அரிசிகளுக்கான கட்டுப்பாட்டு விலை இன்று நள்ளிரவு வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான அதிகூடிய சில்லறை விலை நிதி அமைச்சால் நேற்று முன்தினம் நிர்ணயிக்கப்பட்டது.

இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் சம்பா அரிசி கிலோ ஒன்றின் விலை 80 ரூபாவாகவும், நாடு அரிசி கிலோ ஒன்றின் விலை 70 ரூபாவாகவும் அதிகபட்ச சில்லறை விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலை நிர்ணயம் இன்றைய தினம் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என நிதி அமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments