குளவி கொட்டுக்கு இலக்காகிய நால்வர் வைத்தியசாலையில் அனுமதி


பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கிலானி தோட்டத்தில் தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த நான்கு பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமத்திக்கபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த நான்கு பெண்தொழிலாளர்களும் பொகவந்தலாவ வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெறிவித்தார்.

Comments