வீடியோ).,அரசியலுக்கு அப்பால் சாதித்து காட்டிய ஓட்டமாவடி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம்.

(ihzana fareed)

ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் நடாத்தி வந்த பழைய மாணவர்களுக்கிடையிலான கிறிக்கட் சுற்றுப்போடியின் இறுதி போட்டி அதிகளவிலான பழைய மாணவர்களின் ஈடுபாட்டுடன் வெகு விமர்சையாக அரசியலுக்கு அப்பாலும், ஏனைய பாடசாலைகளுக்கு எடுத்துக்காட்டாகவும் வெற்றியுடன் நடை பெற்று முடிந்தமை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு மட்டுமல்லாமல் தேசியத்துக்கே எடுத்துக்காட்டான விடயம் என கல்குடாவின் படித்த சமூகத்தின் பேசு பொருளாக மாறியுள்ளமை முக்கிய விடயமாக எல்லோராலும் பார்க்கப்படுகின்றது. 

அது மட்டுமல்லாமல் அரசியலுக்கு அப்பால் பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் சாதித்து காட்டிய நிகழ்வாகவும் பிரதேசத்தில் பேசப்படுவது முக்கிய விடயமாகும்.

வாழைச்சேனை மத்தி பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளரும் ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் பழைமாணவர் சங்கத்தில் முக்கிய உறுப்பினராக கடமையாற்றி வரும் எஸ்.ஏ.எம்.றியாஸின் (ADP) முக்கிய பங்காற்றலின் பலனாக பழைய மாணவர் சங்கம் இஸ்தீர தன்மையினை பெற்று அரசியலுக்கு அப்பால் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக நடாத்தி முடிக்க இருக்கின்ற முக்கிய நிகழ்ச்சியாகவே குறித்த பழைய மாணவர்களுக்கான கிறிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி இடம் பெற்றமை முக்கிய விடயமாகும்.

 இருந்தும் வருங்கால இளம் கல்குடா சமூகத்தின் தலைவனாகவும், எதிரே வரும் மாகாண சபையின் வேட்பாளராகவும் களமிறங்க இருக்கும் ஏ.டி.பி றியாஸின் வழிகாட்டலில் வெற்றிகரமாக இடம் பெற்ற குறித்த கிறிக்கட்ட சுற்றுப்போட்டியானது உண்மையில் எல்லோராலும் பாராட்டதக்க வரலாற்று பதிவாகவும், அரசியல் காற்புணர்ச்சியாளர்களுக்கு சிம்ம சொற்பனமான விடயமாகவும் பார்க்கப்படுகின்றது.

நேற்று 24.02.217 வெள்ளிக்கிழமை இடம் பெற்ற இறுதி சுற்றுப்போட்டியியில் கல்குடாவில் மட்டுமல்லாது தேசியத்திலே பேசப்பட்டு வரும் சமூக சேவையாளனும் அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளருமான ஹாரூன் ஸஹ்வி பிரதம அதீதியாக கலந்து சிறப்பித்ததுடன், ஓட்டமாவடி பசார் வர்த்தகர்களை தனது நிருவாக திறமையினால் வெற்றிப்பாதையில் முன் கொண்டு வழி நடாத்தி செல்லும் அக்கீல் டயர் சொப் உரிமையாளர் நியாஸ் ஹாஜி விஷேட அதீதியாக கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், குறித்த கிறிக்கட் சுற்றுபோட்டிக்கு நியாஸ் ஹாஜி பூரண அணுசரனை வழங்கியிருந்தமையும் முக்கிய விடயமாகும்.





Comments