சிறையிலுள்ள இந்திய மீனவர்கள் உண்ணாவிரதம்

(ihzana fareed)

யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் தங்கச்சிமடம், இராமேஸ்வரம், கோட்டைப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 31 மீனவர்கள் இன்று திங்கட்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.

தமது விடுதலையினை வலியுறுத்தி முன்னெடுத்துள்ள இந்த உண்ணாவிரத போராட்டம் குறித்து மீனவர்கள் யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும் இந்திய துணைத்தூதுவருக்கும் மகஜர் மூலம் தெரியப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Comments