தோப்பூரில் மூன்று இலட்சம் தாபரிப்பு பணம் செலுத்தாத நபர் கைது


திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நான்கு பிள்ளைகளுக்கு இரண்டு வருடங்களாக மூன்று இலட்சம் ரூபாய் தாபரிப்பு பணத்தினை செலுத்தாத நபர் ஒருவரை அடுத்தமாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் நேற்று வெள்ளிக்கிழமை(17) உத்தரவிட்டார்.

ஒன்பதாம் வாட்டு,தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் நான்கு பிள்ளைகளுக்கு மாதாந்தம் 12,500 ரூபாய் தாபரிப்பு பணம் செலுத்தி வந்த நிலையில் மூன்று வருடங்களாக தாபரிப்பு பணம் செலுத்தாது வேறு திருமணம் முடித்து வாழ்ந்து வந்த நிலையிலே மனைவி சம்பூர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய சந்தேகநபரை கைது(16) இரவு செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேக நபரை பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Comments