நாடு திரும்பும் ஒரு தொகுதி இலங்கைத் தமிழர்கள்!

.
இந்தியா – தமிழ்நாட்டில் உள்ள மற்றுமொரு தொகுதி இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாதம் 23 ஆம் திகதி இவர்கள் நாடு திரும்பவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பு இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்னெடுத்துள்ள திட்டத்தின் அடிப்படையிலேயே 23 பேர் இவ்வாறு நாடு திரும்பவுள்ளனர்.
09 குடும்பங்களைச் சேர்ந்த 23 இலங்கை புலம்பெயர் தமிழர்களே நாடு திரும்பவுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த இலங்கை புலம்பெயர் தமிழர்கள் வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு திரும்புபவர்களுக்கு விமான பயணச்சீட்டு, போக்குவரத்து கொடுப்பனவு, உணவு நிவாரணம் ஆகியவற்றை ஐ.நாவின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகமே வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Comments
Post a Comment