மருதம் கலைக்கூடல் மன்றத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா


( ihzana fareed)

சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல் மன்றத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவும் சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீமை பாராட்டி கௌரவிக்கும் வைபவமும்
சனிக்கிழமை மாலை சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தின் மர்ஹூம் ஷக்காப் மௌலானா நினைவரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றன.

மன்றத்தின் தலைவரும் முஸ்லிம் சமய, கலாசார மற்றும் தபால் சேவைகள் அமைச்சின் இனைப்பாளருமான அஸ்வான் சக்காப் மௌலானா (ஜே.பி.) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மாகாண அமைப்பாளருமான இம்ரான் மஹ்றூப் பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி பொருளாளருமான கே.எம்.ஏ.ரஸ்ஸாக் (ஜவாத்), சாய்ந்தமருது-மாளிகைக்காடு நம்பிகையாளர் சபைத் ,தலைவர் வை.எம்.ஹனிபா, சமுர்த்தி மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் இணைப்பாளர் ஏ.எம்.ஜாஹிர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

கடந்த பத்து வருடங்களாக சாய்ந்தமருது பிரதேச செயலாளராக கடமையாற்றி இப்பகுதியின் அபிவிருத்திக்கு பெரும் பங்காற்றி, அமைச்சின் மேலதிக செயலாளராக பதவியுயர்வு பெற்றுச் சென்றுள்ள ஏ.எல்.எம்.சலீம் இதன்போது அதிதிகளினாலும் மன்றத்தின் உறுப்பினர்களினாலும் மற்றும் பிரமுகர்களினாலும் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இதன்போது மாணவர்களின் கலை, கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன் அவர்களுக்கு பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.


Comments