சந்திரிக்கா கூறுவதெல்லாம் அப்பட்டமான ‘பொய்’: நாமல்


டுபாயில் தனக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் வங்கிக் கணக்கு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அப்பட்டமான பொய்யுரைப்பதாக தெரிவித்துள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச.

தனது தந்தை 18 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டில் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறி அதை ஆராயவென பல மில்லியன் ரூபாய்களை அரசாங்கம் விரயம் செய்துள்ளது எனவும் மேலும் தெரிவித்துள்ள அவர், பொய்ப் பரப்புகளை செய்து கொண்டிராது முடிந்தால் மத்திய வங்கி முறி மோசடிக்காரர்களை கைது செய்யட்டும் எனவும் சவாவ் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments