“ மஹிந்த ராஜபக்சவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நான் அறியேன்“


2015 ஆம் ஆண்டு  ஜனவரி முதலாம் திகதியன்று மத்திய வங்கி பிணை முறி விநியோகத்தின் நிமித்தம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கையெழுத்து சகிதம் வெளியிடப்பட்டுள்ள வர்தமானி அறிவித்தல் குறித்து நான் அறியேன் என அரச திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க மத்திய வங்கி பிணைமுறி விநியோகத்தில் இடம்பெற்ற மோசடி குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடத்தில் சாட்சியமளித்தார்.

மேற்படி திகதியில் வெளியிடப்பட்டுள்ள மத்திய வங்கி பிணைமுறி விநியோகம் தொடர்பிலான வர்தமானி அறிவித்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கையெழுத்து இடப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அரச சட்டவாதி அவந்தி பெரேரா மத்திய வங்கி பிணை முறி விவகாரத்தினை பரிசீலிப்பதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவிடத்தில் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறான ஒரு வர்தமானி அறிவித்தல் குறித்து தான் அறிந்திருக்கவில்லை என நீதி அமைச்சு மற்றும் திரைசேரியின் செயலாளரான ஆர்.எச்.எஸ். சமரதுங்க பதிலளித்திதார்.

பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்களான உயர் நீதிமன்ற நீதியரசர்களான கே.டீ.சித்திசிறி, பி.எஸ். ஜெயவர்தன ஓய்வுபெற்ற உதவி கணக்காய்வாளர்  வேலுப்பிள்ளை ஆகியோர் முன்னிலையில் இந்த விசாரணை இன்று மூன்றாவது நாளாகவும் இடம்பெற்றது.

இன்று முற்பகல் மூன்றாம் நாள் விசாரணைகள் 10 மணிக்கு ஆரம்பமாகி  2 மணிவரையில் இடம்பெற்றன இதன்போது மேற்படி விவகாரம் குறித்து நிதி அமைச்சு மற்றும் அரச திறைசேரியின் செயலாளர் ஆர்.எச்.எஸ். சமரதுங்கவிடத்தில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

விசாரணைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை வரையில் ஒத்திவைப்பதாகவும் அதற்கு முன்னர் திங்கட்கிழமை விசாரணைகளின் போது அரச அச்சகத்தின் பணிப்பாளரை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறும் அறிவித்தார்.

மேலும் இந்த குழப்பத்தின் மத்தியில் விசாரணைகளை முன்னெடுக்க முடியாது எனவே  2015.01.01 வர்த்தமானியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கையொப்பம் இடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளமையினால் அச்சீட்டின் போது திகதியில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கக்கூடுமா என்பது குறித்த விரிவான விசாரணைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முன்னெடுக்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Comments