பேஸ்புக் நண்பியை நேரில் பார்த்த இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி! பதுளையில் சம்பவம்
அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
தங்காலையில் இருந்து பதுளை நகருக்கு வந்து அலைந்து திரிந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவியை சந்திக்க வந்த இளைஞர் பத்தலவத்த ஹெலபார பகுதியில் நடமாடிக்கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்காலை இந்திபொக்குணுகொட பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பேஸ்புக்கில் அறிமுகமான மாணவியை சந்திக்கவே தான் பதுளை நகருக்கு வந்ததாக இளைஞன் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
தான் சந்திக்க வந்த யுவதி முகநூலில் பார்த்த அழகான யுவதி அல்ல எனவும், அதற்கு முற்றிலும் மாறான யுவதியாக இருந்த காரணத்தினால் வெறுப்படைந்து நகரில் நடந்து திரிந்ததாக இளைஞன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Comments
Post a Comment