*அல் இஸ்லாஹ் இயக்கத்தின் சுதந்திர தின கொண்டாட்டம்*
(Amm Farhan)
அர்சின் நிழலை பெற சமூகத்துக்காய் ஒன்று சேர்ந்த நண்பர் கூட்டத்தின் அடுத்த முன்னெடுப்பு இலங்கை திருநாட்டின் 69வது சுதந்திர தின நிகழ்வு.கடந்த வருடம் போன்று இவ்வருடமும் எமது நகர்வு நோயாளிகளை நலன் விசாரித்தல் எனும் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் இன்று காலை 9 மணியளவில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்றது
.அல்ஹம்துலில்லாஹ்..... இயக்க ஊழியர்களின் ஒத்துழைப்புடன் இயக்க ஆலோசகர் MM.நவாஸ் ஆசிரியரின் வழிகாட்டலில் இடம்பெற்ற இன்றைய சுதந்திர தின நிகழ்வில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் medical suprintent Mr.மோகன்(MBBS) மற்றும் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச இளைஞர் கழக அதிகாரி BM.றியாத் ஆகியோர் பங்கேற்றனர்.
வைத்தியசாலையின் சிறுவர் மற்றும் வலது குறைந்தோர் பகுதிகளில் உள்ள 40 நோயாளிகள் நலன் விசாரிக்கப்பட்டு அன்பளிப்பும் வழங்கப்பட்டது. எமது இச்செயற்றிட்டம் சிறப்பாக நடைபெற இந்நிகழ்விற்கு நிதி உதவிகளை வழங்கிய இயக்க ஊழியர்கள்,ஓட்டமாவடி தேசிய பாடசாலை உயர்தர மாணவ
மாணவிகள்,தனவந்தர்கள் மற்றும் இன்னும் பல நல்லுள்ளங்களுக்கும் இயக்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகளும் பிராத்தனைகளும்.... நோயாளியை நலன் விசாரித்தல் தொடர்பாக அல்லாஹ்விடத்தில் நன்மைகள் ஏராளம். தூய எண்ணத்துடன் சமுகத்தினூடாக சுவனத்தை நோக்கிய பயணத்தில் எம்முடன் கைகோருங்கள்..... #AL ISLAH MOVEMENT #AL ISLAH YOUTH CLUB ODDAMAVADI.. AIM MEDIA







Comments
Post a Comment