கந்தளாய் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் அடிதடி தாக்குதல் அன்வர் ஸ்தளத்திற்கு விஜயம் மேற்கொண்டு சுமூக நிலை

(22.02.2017)கடந்த பல வருடங்களாக கந்தளாய் பிரதேச முஸ்லீம் மீனவர்கள் கந்தளாய் குளத்தில் வீச்சு வலை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டு வந்துள்ளனர் பின்னர் தடை உத்தரவு திடீர் என பிறப்பிக்க பட்டதும் வறுமை கோட்டின்கீழ் வாழ்கிற மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்க பட்டநிலையில் தமக்கு மாற்று நடைமுறை பெற்று தராமல் திடீர் என இவ்வாறு செய்வது தமது அன்றாட உணவுக்கு கூட இல்லாத நிலையில் நியாயம் கேட்டு கந்தளாய் பிரதான வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேளையில் பெரும்பாண்மை இனத்தை சேர்ந்த சிலர் முஸ்லீம் இளைஞ்சர்கள் மீது அடிதடி நடாத்திய வேளையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்அன்வர் குறித்த பகுதிக்கு முதல் அமைச்சரின் பணிப்பின்பேரில் விரைந்து திருகோணமலை அரசாங்க அதிபரோடு தொடர்பு கொண்டு விடயங்களுக்கான தற்காலிக தீர்வினை பெற்று கந்தளாய் பிரதேச சிரேஸ்ட போலீஸ் அத்தியட்சகரோடு இணைந்து சுமூகமான முறையில் ஆர்ப்பாட்டம் கை விடப்பட்டு மக்கள் களைந்து சென்றனர்

மேலும் இருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் பின்னர் கந்தளாய் பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகருடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தொடர்பு கொண்டு கேட்டபோது நாளை (வியாழன்) 23.02.2017 காலை 10.30 மணியளவில் இரு சமூகத்தை சேர்ந்த மதகுருமார் பிரதேச முக்கியஸ்தர்கள் மற்றும் முஸ்லீம் சிங்க மக்களையும் அழைத்து சமாதான புரிந்துணர்வு தொடர்பான கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருப்பதாக கூறினார்










Comments