தம்புள்ள பள்ளிவாசல் காணி விவகாரம்: உரிமைகளை விட்டுக்கொடுக்கத் தயாரில்லை
இனவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி பின்னர் அகற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகின்ற தம்புள்ள பள்ளிவாசல் விடயத்தில் எந்தவித விட்டுக் கொடுப்புக்களுக்கும் தாம் தயாரில்லை என தம்புள்ள பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் எஸ்.வை.எம்.ஸலீம்தீன் தெரிவித்தார்.
சிறு கொட்டிலில் தம்புள்ள நகருக்கு அருகாமையில் இயங்கி வருகின்ற இந்த ஜும்ஆப் பள்ளிவாசல், புனித பூமிக்குள் அமைந்துள்ளதாகக் கூறி அதனை அகற்றிக் கொள்ளுமாறு பௌத்த கடும்போக்குவாதிகளினால் கோரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் பாதை விஸ்தரிப்பதற்கு தடையாக இருப்பதாகக் கூறி அரச மட்டத்தில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
இத்தனை சவால்களுக்கும் மத்தியில் ஓரிரு அரசியல்வாதிகளே எமக்குத் துணையாக வந்தனர். ஆபத்தின் போது உதவாத எந்த முஸ்லிம் அரசியல் தலைமைகளின் வேண்டுகோளுக்கும் நாங்கள் இணங்கப் போவதில்லை. பள்ளிவாசலுக்கு உரிய காணியைப் பெற்றெடுப்பதில் நாங்கள் எந்த விட்டுக் கொடுப்புக்கும் தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தம்புள்ள பள்ளிவாசலுக்குச் சொந்தமான 41.49 பேர்ச்சஸ் நகர்ப்புற நிலத்தில் தம்புள்ள பள்ளிவாசல் அமைந்துள்ளது. இந்தப் பள்ளிவாசலை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு பள்ளிவாசல் நிர்வாகம் இணங்கிய போதும், தற்போது இந்தக் காணிக்குப் பதிலாக புறநகர்ப் பகுதியொன்றில் 20 பேர்ச்சஸ் காணி மட்டுமே வழங்கப்படும் என அமைச்சர் சம்பிக்க ரணவக தெரிவித்துள்ளார்.
நகர்ப்புறத்திலுள்ள 41 பேர்ச் காணிக்குப் பதிலாக புறநகர்ப்பகுதியில் வழங்கப்படும் காணி 80 பேர்ச்சாக இருக்க வேண்டும். இதற்குக் குறைந்த எந்த இணக்கப்பாட்டுக்கும் தாம் தயராக இல்லை என பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்து வருகிறது. இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோருடனான சந்திப்பொன்றை மேற்கொள்வதற்கு அமைச்சர் பௌஸி உறுதியளித்துள்ளதாகவும் கூறிய ஸலீம்தீன் இது எமது உரிமை. உரிமைகளில் விட்டுக் கொடுப்புக்கு இடமில்லை என மேலும் தெரிவித்தார்.
இதேவேளை வக்பு சொத்துக்களைப் பரிபாலிப்பதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் பள்ளிவாசல் நிர்வாகிகள் சட்ட ரீதியாகப் போராட முன்வந்தால் அவர்களுக்குத் தேவையான ஒத்துழைப்புக்களை வக்பு சபை வழங்கும் என வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி யாசீன் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment