பகிடி வதையை தடுக்க ஜனாதிபதி ஆலோசனை விடுத்துள்ளார்!


பகிடி வதையை தடுப்பதற்காக பல்கலைக்கழக நிர்வாகத்துடன் இணைந்து செயற்படுமாறு காவற்துறைமா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன தெரிவித்துள்ளார்.

மதுகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலம் குறித்து அரசாங்கத்திற்கு பொறுப்புள்ள அதே வேளை, அதனை எந்தவித தயக்கமும் இன்றி நிறைவேற்றவுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Comments