கல்வித்தாரை முழு நிலாக்கலை விழாவும் சாதனையாளரை மேன்மைப்படுத்தும் நிகழ்வும் வவுனியா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது,

(ihzana fareed)

10/02/2017 கல்வித்தாரை முழு நிலாக்கலை விழாவும் சாதனையாளரை மேன்மைப்படுத்தும் நிகழ்வும் வவுனியா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது,

 இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கௌரவ கே,காதர் மஸ்தான் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்

 வவுனியா நகர மன்றிலே சாதனையாளர் நிகழ்வில் உரையாற்றும்போது, 
 அரச நியமனம் வழங்கும்போது இப்பிரதேசத்தில் வசிக்கும் தகுதியானவர்களுக்கே வழங்கப்பட வேண்டுமெனவும்

அவர்களின் கல்வித்தரத்தினை வட மாகாணத்திற்கு வெளியே காணப்படும் உயர் கல்வித்தரத்துடன் ஒப்பிடுவது பொருத்தமற்றது.ஏனெனில் எமது பிரதேசம் முப்பது வருட அசாதரண சூழ்நிலைக்குட்பட்ட நிலையில் காணப்பட்டதை உயர் மட்ட நிலை சார் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளேன் என தனதுரையில் மஸ்தான் எம் பி தெரிவித்தார்.







Comments