மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளரை இடமாற்றுமாறு ஆர்ப்பாட்டம் (photo

(ihzana fareed)

மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளரை இடமாற்றம் செய்யக்கோரி மூதூர் பிரதேசத்திலுள்ள 28 சமூக அமைப்புக்களும் பொது மக்களும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம் மூதூர் வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்பாக இரண்டாவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது.

குறித்த இடத்திற்கு வருகை தந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹீர் இது சம்மந்தமாக தான் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும் அதற்கு அவர்கள் மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளரை தற்காழிகமாக கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்திற்கு இணைத்துக் கொள்ளவுள்ளதாக தன்னிடம் தெரிவித்ததாக ஆர்ப்பாட்டக்காரர்களிடம் தெரிவித்தார்.

எனினும் இதனை ஏற்றுக் கொள்ளாத ஆர்ப்பாட்டக்காரர்கள் தமக்கு எழுத்து மூலம் மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றம் தொடர்பான கடிதம் கிடைக்கும் வரை ஆர்ப்பாட்டம் தொடருமெனவும் தெரிவித்தனர். தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம் இடம் பெற்று வருகின்றது.

அதே வேலை இன்றைய தினம் 150 க்கும் மேற்பட்ட மூதூர் பிரதேச ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை கிடைக்கப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Comments