தோப்பூர் இக்பால் நகரில் யானையின் தாக்குதலில் வீடொன்று சேதம் (Photo)
திருகோணமலை மாவட்டத்தில் தோப்பூர் இக்பால் நகர் 30 வீட்டுத் திட்டம் மக்கள் குடியிருப்பு பகுதியில் நேற்று 19 ஞாயிற்றுக் கிழமை அதிகாலை காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்துள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.
இதன் போது ஒரு குடியிருப்பு வீடொன்றையும் இக் காட்டு யானைகள் அடித்து துவசம் செய்துள்ளதாக வீட்டிலிருந்து சமையல் பாத்திரங்கள் , ஏனைய பொருட்களையும் சேதப்படுத்தி உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
இந்த பகுதியில் தொடர்ச்சியாக காட்டு யானைகள் வந்து அட்டகாசம் இடம் பெற்று வருவதாகவும் இதனால் இரவு நேரங்களில் பீதியுடன் இரவை கழிப்பதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.




Comments
Post a Comment