தற்பொழுது SLMC யின் தலைமை மற்றும், தவிசாளர் பதவிகளுக்கு நிசாம் காரியப்பரும், மன்சூருமே பொருத்தமானவர்கள்., கட்டாரிலிருந்து அல்ஹாஜ் நபீர்.,(ஓடியோ).

(ihzana fareed)

சமகாலத்தில் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தினுடைய பகிரங்க குற்றச்சாட்டுக்களினால் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அதன் தலைமையான அப்துர் ரவூப் ஹிபத்துல் ஹக்கீமும் முகம் கொடுத்து வருகின்ற பிரச்சனையானது சிறீங்கா முஸ்லிம் காங்கிரசின் கட்சி சார்ந்த விடயமாக இருந்தாலும் நான் கட்சிக்கு வெளியால் இருந்து கொண்டு கட்சியின் நகர்வுகளை நோக்குகின்ற பொழுது ஆரம்ப காலத்திலிருந்து இன்று இருக்க கூடிய உயர் பீட உறுப்பினர்களில் மர்ஹும் 

எம்.எச்.எம்.அஷ்ரஃபினுடைய காலம் தொட்டு கட்சிக்காக வேண்டியும், கட்சியின் விசுவாசத்திற்காகவும் முன்னாள் கல்முனை மேயர் நிசாம் காரியப்பர் கட்சியின் தலைமை பொறுப்பிற்கு பொருத்தமாகும் அதே நேரத்தில் சம்மாந்துறை பிரதி நிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் கட்சியின் தவிசாளர் பதவிக்கு மிகப் பொருத்தமானவர் என ஸ்ரீ லங்கா. நபீர் பௌண்டேசனின் இஸ்தாபக தலைவர் அல்-ஹாஜ் உதுமான் கண்டு நபீர் கட்டாரிலிருந்து தொலை பேசியினூடாக தெரிவித்தார்.

அதிலும் முக்கியமாக கடந்த வாரத்திற்கு முன்னர் இடம் பெற்ற சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர் பீட கூட்டத்தில் கட்சியின் தலைமை மீது குற்றம் சுமத்தியுள்ள தவிசாளர் பசீர் சேகு தாவூத் தவிசாளர் பதவியிலிருந்து இடை நிறுத்தப்பட்டதற்கு பிற்பாடு கட்சியில் வெற்றிடமாக இருக்கின்ற 
அதிகாரமிக்க முக்கிய பதவியான கட்சியின் தவிசாளர் பதவி சமபந்தமாக இன்று 12.02.2017 ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம் பெறவுள்ள கட்சியின் பேராளர் மாநாட்டில் கட்சியின் தலைமையும் உயர் பீடமும் மிகச்சரியான முடிவெடுத்து கட்சியின் மூத்த போராளியும் பாராளுமன்ற உறுப்பினருமான மன்சூருக்கு தவிசாளர் பதவி வழங்கப்படுவதே பொருத்தமான விடயமாகும். மு.கா விலிருந்து ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரையும் கட்சிக்கு விசுவாசமாக கட்சிக்காக உழைத்து வரும் மூத்த போராளியான பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் தற்போதைய நிலையில் கட்சிக்குள் இருப்பவர்களில் மிகவும் பொருத்தமானவராகும். தவிசாளர் பதவி என்பது கட்சிக்கான மிகவும் முக்கியமான பதவிகளில் ஒன்றாகும். 

ஆகவே கட்சிக்காக பல்வேறு சந்தரப்பங்களில் பல வகையான இன்னல்களை அனுபவித்து தன் உயிரையும் துச்சமாக கருதி முஸ்லிம்களுக்கும் மு.கா. கட்சியின் இருப்புக்கும் உழைத்தவர் என்ற வகையில் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் தவிசாளர் பதவிக்கு மிகப் பொறுத்தமானவராவார். ஆனால் சமூக வலைத்தளங்களில் பரவலாக கட்சியின் அடுத்த தவிசாளர் மாகாண சபை உறுப்பினர் தவத்திற்கு கொடுக்கப்படலாம் என்ற செய்திகள் பிரசுரிக்கப்பட்டு வருவது சம்பந்தமான கேள்விக்கு பதிலளித்த நபீர் பௌண்டேசனின் இஸ்தாபக தலைவர்…

அம்பாறை மாவட்டத்தில் இருக்க கூடிய உயர் பீட உறுப்பினர்களில் மாகாண சபை உறுப்பினர்களில் ஒருவர்தான் தவம். அந்த வகையிலே எப்பொழுதும் தலைமைகள் தமக்கு விசுவாசமாக இருக்க கூடியவர்களை பதவிகளில் நியமிப்பது வழக்கமாக இருக்கின்றது. ஆனால் இந்த தலைமை என்பது உயர் பீடத்தில் இருக்கின்ற எல்லோரையும் தன்னுடைய விசுவாசியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். விசுவாசம் இல்லாதவர்களை கட்சியில் வைத்துக்கொண்டு அரசியல் செய்வது என்பது ஜனநாயக ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத விடயமகும். 

அந்த அடிப்படையில் சகோதரர் தவம் தலைவருக்கு விசுவாசமாக இருக்கின்றார் என்றால்? சகோதரர் மன்சூரும் தலைமைக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். தலைமைத்துவம் என்று வருகின்ற பொழுது ஒவ்வொரு உறுப்பினர்களும் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு விட்டுக்கொடுப்புடன் செயல்படுபவர்களாக இருக்க வேண்டும் அந்த அடிப்படையிலே சகோதரர் தவம் முஸ்லிம் காங்கிரசிற்குள் இடைக்காலத்தில்உள்வாங்கப்பட்டவர். ஆகவே முஸ்லிம் காங்கிரசின் தலைமை தவத்திற்கு தவிசாளர் பதவி கொடுக்கின்ற விடயத்தில் அம்பாறை மாவட்டத்து முஸ்லிம் காங்கிரசின் ஒட்டு மொத்த ஆதரவாளர்களும் போராளிகளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதே தன்னுடைய கருத்தாக இருக்கின்றது.

மேலும் சகோதரர் தவம் கடந்த கால தேர்தலில் அக்கறைப்பற்றில் போதியளவு வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாமையானது நான் மேற் கூறிய விடயத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றது. கடந்த மாகாண சபை தேர்தலில் தவம் அதிகப்படியான விருப்பு வாக்குகளை பெற்றிருந்தாலும் அது அமைச்சர் அதாவுல்லாஹ் மீது அதிருப்தி அடைந்த வாக்களர்கள் முஸ்லிம் காங்கிரசிற்கு அளித்த வாக்குகளே தவிர தவத்திற்கு கிடைத்த தனிப்பட்ட வாக்குகளாக பார்க்க முடியாது. ஆகவே எதிர்வருகின்ற காலங்களில் அவர் மாகாண சபையில் அமர்வதென்பது கேள்விக்குறியான விடயமாகவே இருக்கின்றது.

இந்த நிலையில் முஸ்லிம் காங்கிரசினுடைய தலைமையும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது. தலைமையானது அம்பாறை மாவட்டத்தில் முன்பை போன்று ஏதாவது தேர்தலில் களமிறங்குமானால் தலைமை அம்பாறை மாவட்டத்திலிருந்து தகுந்த பாடத்தினை கற்றுக்கொள்ளும் என்பதில் மாற்றுக்கருத்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே முஸ்லிம் காங்கிரசின் தலைமை தவிசாளர் பதவி விடயத்தில் நல்ல முடிவினைத்தான் எடுக்கும் என்பது என்னுடைய கருத்தாக இருக்கின்றது என உதுமான் கண்டு நபீர் கட்டாரிலிருந்து தொலைபேசியினூடாக தனது கருத்துக்களை தெளிவுபடுத்தினார்.

மேலும் கேற்கப்பட்ட சில கேள்விகளுக்கு நபீரினால் வழங்கப்பட்ட விரிவான பதிகள் அடங்கிய காணொளி எமது ஈனைய வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  

Comments