வஸீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்ட தினத்தின் பதிவுகள் மாயம் : 10 இராணுவ வீரர்கள் விசாரணை வலயத்தில்

பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட தினத்தன்றுக்குரிய ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு பதிவுப் புத்தகத்தின்பல பக்கங்கள் திட்டமிட்டு கிழிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாயவுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் கேர்ணல், மேஜர் தர அதிகாரிகள் உள்ளிட்ட 10 இராணுவ வீரர்களை விசாரணை வலயத்தில் வைத்து விசாரித்து வருவதாக புலனாயவுப் பிரிவினர் கொழும்பு மேலதிக நீதிவான் ஜயராம் டொஸ்கிக்கு அறிவித்தனர்.

வஸீம் தாஜுதீன் படுகொலை விவகார வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போதே சிறப்பு மேலதிக அறிக்கை ஊடாக புலனாய்வுப் பிரிவினர் இதனை அறிவித்தனர்.

Comments