14 வயதில் பல்கலையில் கற்பிக்கும் முஸ்லிம் சிறுவன்
14 வயதிலேயே பல்கலைக்கழக மாணவர்களுக்கு கணிதப் பாடம் கற்பிக்கும் ஆசிரியனாகியுள்ளார் யஷா அஷ்லி எனும் முஸ்லிம் சிறுவன்.
‘human calculator’ எனும் புனைப்பெயரில் அறியப்படும் கணித மேதையாக உருவெடுத்து வரும் யஷா, வளர்ந்தோருக்கும் விரிவுரைகளின் பின்னர் கணித தீர்வுகளுக்கான பயிற்சி மற்றும் விளக்கங்களை வழங்குவதற்காக விசேட அனுமதியுடன் இங்கிலாந்தின் லெஸ்டர் பல்கலைக்கழகத்தில் ஊதியம் பெறும் ஆசிரியராக இணைக்கப்பட்டுள்ளார்.
எட்டு வயதிலேயே உயர்தர கணித பாடத்தில் 99 புள்ளிகளுடன் தரத்தில் சித்தியடைந்ததோடு லெஸ்டர் பல்கலைக்கழகத்தின் வயது குறைந்த மாணவரும் ஆசிரியரும் யஷா என்பதும் சிறு வயதில் தாயை இழந்த யஷாவை தந்தை மூஸா அஸ்லி சிரத்தையுடன் வளர்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment