மஹிந்தவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாரிய ஊழல் மோசடி மற்றும் அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வாக்குமூலம் ஒன்று பதிவு செய்துக் கொள்வதற்காகவே அவருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மஹிந்தவின் ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது பாரிய பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இதன்படி, அரச ஊடகத்திற்கு செலுத்த வேண்டிய பணம் இன்னமும் செலுத்தப்படவில்லை எனவும் இது தொடர்பாகவே குறித்த விசாரணை இடம்பெறவுள்ளதாகவும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Comments