திருமலையில் 26 ஆவது நாளாக தொடரும் வேலையில்லாப் பட்டதாரிகளின் சத்தியக்கிரக போராட்டம்


திருகோணமலையில் வேலையில்லா பட்டதாரிகளின் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்றும் (27) திங்கட் கிழமை 26 ஆவது நாளாக தொடர்கின்றது இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளாமை குறித்து பட்டதாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்துக்கு முன்பே இவ்வாறு வேலையில்லாப் பட்டதாரிகள் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பல சுலோகங்களுடனும் அதிக வெயிலிலும் தமது கஷ்டங்களைப் பாராது தங்களுக்கான அரச துறையில் நியமனங்களை வழங்குமாறு வழியுறுத்தியே இப்போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது எனவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதற்கான நடவடிக்கைகளை அரசு காலதாமதம் ஏற்படாது சரியான முடிவினை பெற்றுத்தருமாறும் இல்லாது போனால் இப்போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் மேலும் திருகோணமலை வேலையில்லாப் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

Comments