ஹஜ் விண்ணப்பங்களுக்கு வலிதுத்தன்மை 2 வருடங்களே


ஹஜ் குழுவின் தலைவர் சியாத்
புனித ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­காக கிடைக்­கப்­பெறும் விண்­ணப்­பங்­களின் வலிதுத் தன்மை இரண்டு வரு­டங்­க­ளாகும்.

விண்­ணப்­பித்து இரண்டு வரு­டங்­க­ளுக்குள் ஹஜ் கட­மையை நிறை­வேற்­றா­த­வர்­க­ளது விண்­ணப்­பங்கள் பதி­வி­லி­ருந்தும் அகற்­றப்­படும் என அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி மொஹமட் தாஹா சியாத் தெரி­வித்தார்.

ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­காக விண்­ணப்­பித்­துள்­ள­வர்­களில் 4000 பேருக்கு 2017 ஆம் ஆண்டின் ஹஜ் கட­மையை மேற்­கொள்­வதை உறுதி செய்­யு­மாறு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் கடி­தங்­களை அனுப்­பி­வைத்­துள்­ளது.

திணைக்­க­ளத்தின் பதில் பணிப்­பாளர் எம்.எல்.எம். அன்வர் அலி கையொப்­ப­மிட்டு கடி­தங்­களை அனுப்பி வைத்­துள்ளார்.

கடி­தத்தில் பின்­வ­ரு­மாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ‘சவூதி அரே­பிய அர­சினால் இலங்­கைக்கு வழங்­கப்­பட்­டுள்ள ஹாஜி­களின் எண்­ணிக்கை வரை­ய­றுக்­கப்­பட்­டுள்­ளதால் திணைக்­க­ளத்தில் பதிவு செய்­துள்ள ஹாஜி­க­ளது பயண ஒழுங்­கு­களை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக மீள­ளிக்­கப்­ப­டக்­கூ­டிய 25 ஆயிரம் ரூபா இலங்கை வங்கிக் கணக்­கி­லக்கம் 2327593 (Hajj Account) வைப்புச் செய்து பற்­றுச்­சீட்டின் மூலப் பிர­தி­யையும் இணைத்து, இத­னு­ட­னுள்ள விண்­ணப்­பத்தை பூர்த்தி செய்து ஏப்ரல் மாதம் 5 ஆம் திக­திக்கு முன்பு திணைக்­க­ளத்தில் சமர்ப்­பித்து ஹஜ் பிர­யா­ணத்தை உறு­திப்­ப­டுத்திக் கொள்­ளு­மாறு ஹஜ் குழு பணித்­துள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஹஜ் குழுவின் தலைவர் எம்.ரி.சியாத் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில்; ‘அநே­க­மானோர் ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­காக விண்­ணப்­பித்து விட்டு பல வரு­டங்கள் கடந்தும் கட­மைக்­கான ஏற்­பா­டு­களைச் செய்­வ­தில்லை. இதன் கார­ண­மா­கவே ஹஜ் விண்­ணப்­பத்தில் வலிது கால எல்லை இரண்டு வரு­ட­மாக மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, கடந்த வருடம் ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்கு சகல ஏற்­பா­டு­க­ளையும் செய்து இறுதி நேரத்தில் கட­மையை நிறை­வேற்ற முடி­யாமற் போன­வர்­க­ளுக்கு இந்த வருடம் சந்­தர்ப்பம் வழங்­கப்­படும் என்­றாலும் அவர்­களும் மீள­ளிக்­கப்­ப­டக்­கூ­டிய 25 ஆயிரம் ரூபா கட்­ட­ணத்தைச் செலுத்தி தங்களது பயணத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும். இவ்வருடத்திற்கான ஹஜ் முகவர்கள் நியமனம் இதுவரை வழங்கப்பட வில்லை. எனவே முகவர்களை இப்போதே ஹஜ் யாத்திரிகர்கள் தெரிவு செய்துக் கொள்ளக் கூடாது என்றார்.

Comments