ஹஜ்ஜுக்காக விண்ணப்பித்த 3000 பேருக்கு கடிதம் அனுப்பிவைப்பு


இவ்­வ­ருட ஹஜ் கட­மைக்­காக, விண்­ணப்­பித்­த­வர்­க­ளி­லி­ருந்து 3000 பேருக்கு கடி­தங்கள் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை மேற்­கொள்­வதை அவர்கள் உறு­திப்­ப­டுத்­து­வ­துடன் ஹஜ் வங்கிக் கணக்­குக்கு 25 ஆயிரம் ரூபா பதிவுக் கட்­டணம் செலுத்­து­மாறு வேண்­டப்­பட்­டுள்­ள­தா­கவும் அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி மொஹமட் தாஹா சியாத் தெரி­வித்தார்.

இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். 

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்,
ஹஜ் கட­மைக்­காக இது­வரை 12 ஆயிரம் பேர் விண்­ணப்­பித்­துள்­ளார்கள். இந்த விண்­ணப்­பங்­களில் கடந்த வருடம் ஹஜ் கடமை மேற்­கொண்­ட­வர்­களின் விண்­ணப்­பங்­களும் உள்­ள­டங்­கு­கின்­றன. அவற்றைத் தவிர்த்து வரிசைக் கிர­மப்­படி 3000 பேருக்கு கடி­தங்கள் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன.

செலுத்­தப்­படும் பதிவுக் கட்­டணம் 25 ஆயிரம் ரூபா யாத்­தி­ரி­கர்­களின் பயணக் கட்­ட­ணத்­தி­லி­ருந்தும் குறைத்துக் கொள்­ளப்­படும். ஹஜ் முக­வர்­களை நிய­மிப்­ப­தற்­கான நேர்­முகப் பரீட்சை இம்­மாத இறு­தியில் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

ஹஜ் முக­வர்­களின் நிய­ம­னத்­தின்­போதே முக­வர்­க­ளுக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள முறைப்­பா­டுகள் கவ­னத்திற் கொள்­ளப்­படும்.

நேர்­முகப் பரீட்சை உயர் நீதி­மன்றம் ஏற்­க­னவே வழங்­கி­யுள்ள ஹஜ் வழிமுறையின் படியே நடத்தப்படும். இதேவேளை, ஹஜ் கோட்டா பகிர்வும் கடந்த வருட பகிர்வின் அடிப்படை யிலேயே முன்னெடுக்கப் படும் என்றார்.

Comments