தம்பலகம பிரதேசத்தில் டெங்கு குடம்பிகள் காண்டு பிடிக்கப்பட்ட சுமார் 40இற்கு மேற்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

(mahroof nifras)

தம்பலகம பிரதேச செயலாளர் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் நேற்றும் இன்றும் மீரா நகர், சிராஜ் நகர் பகுதிகளில் வீடுகள், மற்றும் பொது இடங்கள் பார்வையிடும் வேலைத்திட்டம் இடம் பெற்றது

இதில் பிரதேச செயலாளர், உதவிதிட்டமிடல் பணிப்பாளர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வை இட்டதுடன் பொதுச்சுகாதார பரிசோதகர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்,கிராம உத்தியோகத்தர்,சமுர்த்தி உத்தியோகத்தர், பொலிஸ், தரைப்படை, பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகந்தர்களும் கலந்து கொண்டு வீடுகள் மற்றும் பொது இடங்களை பார்வை இட்டனர்.

இது வரை தம்பலகம பிரதேசத்தில் டெங்கு குடம்பிகள் காண்டு பிடிக்கப்பட்ட சுமார் 40இற்கு மேற்பட்டவர்களுக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வேலைத்திட்டம் நாளை முள்ளிப்பொத்தானை பகுதிகளில் இடம்பெறவுள்ளது.





Comments