கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள 66 முஸ்லிம் தமிழ் பாடசாலைகள் நாளை முதல் மூன்று தினங்களுக்கு மூடுவதற்கான அறிவிப்பை கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் இன்று விடுத்துள்ளார்.

(Nijamudeen Arkam)

கிண்ணியாவில் டெங்குத் தாக்கத்தினால் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல மரணங்களும் நிகழ்ந்துள்ளது. இதனால் பாடசாலைக்கு வருகைதரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வரவில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

 இவ்வாரான காரணங்களை தெளிவுபடுத்தி கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர்,கல்விச் செயலாளர்களுடன் கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் இன்று முதல் மூன்று தினங்களுக்கு(15,16,17) பாடசாலைகளை கிண்ணியா கல்வி வலயத்தில் மூடுவதற்கான அறிவிப்பை வழங்கியுள்ளதாக கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர்ஏ.எம்.அஹமட் லெப்பை தெரிவித்தார்.

Comments