வீடியோ).,ADP றியாசின் குதூகல பாடலோடு தேசியத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்த ஓட்டமாவடி OCC யின் BACK TO SCHOOL நிகழ்வு…
(ihzana fareed)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா தொகுதி ஓட்டமாவடியில் 1917ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஓட்டமாவடி தேசிய பாடசாலையானது தனது நூற்றாண்டு விழாவினை இவ்வருடம் ஏப்ரல் 29ம் திகதி அதிமேதகு ஜனாதிபதியின் பங்குபற்றுதலோடு இறுதி நிகழ்வினை கொண்டாட இருக்கின்றது.
அந்த வகையிலே எட்டு நிகழ்வுகளின் ஒன்றான BACK TO SCHOOL எனும் பாடசாலைக்கு பழைய மாணவர்கள் மீண்டும் திரும்புதல் எனும் நிகழ்வானது இன்று 19.03.2017 ஞாயிற்றுக்கிழமை கோறளைப்பற்று மத்தி உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.எம்.றியாசின் (ADP) குதூகல பாடலோடு இடம் பெற்றமை தேசியத்திற்கு எடுத்துக்காட்டாகவும், குறித்த நிகழ்வின் இறுதி நிகழ்ச்சியான மாணவ மன்றத்தினை அசத்திய நிகழ்வாகவும், பழைய மாணவர்களை மகிழ்வித்ததாகவும் அமைந்திருந்தது.
அது மட்டுமல்லாமல் எதிர்பார்ப்பினையும் மீறி பழைய மாணவர்கள் கலந்து கொண்டமையும் கல்குடாவின் அரசியல் தலைமையும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தான் ஒரு பாடசாலை மாணவனாக மாறியதுடன் பாடசாலை சீருடையுடன் துவிச்சக்கர வண்டியில் பாடசாலைக்கு சமூகமளித்தமையானது எல்லோரினதும் கவனத்தினை ஈர்த்த விடயமாகவும் காணப்பட்டது.
குறித்த BACK TO SCHOOL மீண்டும் பாடசாலைக்கு திரும்புதல் எனும் நிகழ்வானது பாடசாலையில் அதிபர்களாக, ஆசிரியர்களாக கடமையாற்றியவர்களும், அவர்களிடம் கற்ற பழைய மாணவர்கள் மீண்டும் பாடசாலைக்கு திரும்பி கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், கடந்த கால நினைவுகளை மீட்கும் அரிய வரலாற்று நிகழ்வான நிகழ்ச்சியாக பாடசாலையின் முகாமைத்துவம் திட்டமிட்டு ஏற்பாடு அதில் இன்று வெற்றி கண்டுள்ளமை நூற்றாண்டினை கொண்டாட இருக்கும் ஓட்டமாவடி தேசிய பாடசாலைக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகவே பிரதேச மக்களினால் பார்க்கப்படுகின்றது.
ஓட்டமாவடி தேசிய பாடசலையின் நூற்றாண்டு நிகழ்வான BACK TO SCHOOL நிகழ்வில் இடம் பெற்ற மனதினை கொள்ளைகொள்ள கூடிய காட்சிகள் அடங்கிய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.








Comments
Post a Comment