ஓட்டமாவடி தேசிய பாடசலையின் BACK TO SCHOOL ஏனைய பாடசாலைகளுக்கு வரலாற்று முன்மாதிரியாகும்..நாபிர் பெளண்டேசன்

(ihzana fareed)

அண்மையில் 19.03.2017 ஞயிற்றுக்கிழமை ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்ட்டு விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட BACK TO SCHOOL பழைய மாணவர்கள் மீண்டும் பாடசாலைக்கு திரும்புதல் எனும் நிகழ்வினை பார்க்கின்ற பொழுது தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவர் பொறியியலாளர் அல்-ஹாஜ் நாபீர் தெரிவிக்கின்றார்.

மேலும் தனது கருத்தினை தெளிவுபடுத்திய அல்-ஹாஜ் நாபீர்.. அண்மையில் இடம் பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப்போடியோடு BACK TO SCHOOL எனும் நிகழ்வினை உன்னிப்பாக அவதானித்த வேளையில்  தானும் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் ஒரு பழைய மாணவனாக இருந்திருந்தால் இவ்வாறான நிகழ்வில் தானும் கலந்து கொண்டிருக்கலாம் என்ற அவா என் மனதினை ஆட்கொண்டது. இதுவே தான் இவ்வாறு மகிழ்ச்சி அடைவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது

இவ்வாறான நிகழ்வுகள் ஒரு சமூக ஒற்றுமையினை பிரதேசத்தில் மட்டுமல்லாது தேசியம், கடல் கடந்த நிலையில் உறுவாக்க கூடிய வல்லமை கொண்டதாகும். புத்திஜீவிகள், பாமர மக்கள் என ஒன்று சேர்ந்து தாங்கள் கல்வி கற்றபாடசலையின் சீறுடையுடன் ஒருமித்து காணப்பட்ட விடயமானது உண்மையில் மனதார பாரட்டப்பட வேண்டியதும், ஏனைய பிரதேசங்களில் உள்ள பாடசாலை சமூகங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டான விடயமுமாகவே என்னால் பார்க்கப்படுகின்றது.

அந்த வகையிலே கிழக்கு மாகாணத்தில் உள்ள சலக பாடசாலைகளிலும் கல்வி கற்று வெளியேறிய மாணவர்கள் அணைவரும் ஒன்று சேர்ந்து தங்களுடைய பாடசலையின் வளர்ச்சி படியிலும், அதன் பெருமேறுகளின் அடிப்படையில் கிடைக்கும் ஆனந்தத்திலும், சமூக ஒற்றுமை எனும் காட்டமைப்பிலும் பங்காற்ற வேண்டிய விடயத்தினை ஓட்டமாவடி தேசிய பாடசலையின் பழைய மாணவர்கள் நூற்றாண்டு விழாவிற்காக ஒன்று சேர்ந்து BACK TO SCHOOL நிகழ்வில் கலந்து கொண்டு தேசியத்திற்கும், சர்வதேசத்திற்கு, எடுத்துகாட்டாக காட்டியுள்ளமை ஏனைய படசலைகளுக்கும், சமூகங்களுக்கும் ஒரு முன்மாதிரியாகவே உள்ளது.

அது மட்டுமல்லாமல் கல்குடாபிரதேசத்தின் 15 வருடங்களுக்கு மேலாக பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தான் கற்ற பாடசாலையினை மறக்காமல் தான் ஒரு மாணவனாக மாறி குறித்த BACK TO SCHOOL நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பாடசாலை சீறுடையுடன் துவிச்சக்கர வண்டியில் சமூகமளித்தமையானது மேலும் ஒரு படி குறித்த நிகழ்விற்கு வலுச்சேர்த்த விடயமாக அமைந்திருந்ததை என்னால் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.

அத்தோடு இவ்வாறான நிகழ்வினை நான் அரசியலுக்கு அப்பால் நின்று பார்க்கின்ற அதே நேரத்தில்-- பாடசலையில் கல்வி கற்று ஏனைய பிரதேசங்களில் திருமணம் முடித்து வாழுகின்றவர்கள் இந்த நிகழ்வினை பார்க்கின்ற பொழுது தாங்களும் எங்கள் சொந்த ஊரான ஓட்டமாவடி பிரதேசத்து சமூகத்துடன் இணைந்து வாழ வேண்டும் என்ற ஆசை அவர்களுடைய மனதில் ஏற்பட்டிருக்கும் என்பதில் எந்த மாற்றுகருத்தும் இருக்க முடியாது.

அந்த வகையில் இவ்வாறான நிகழ்வுகளில் மாற்று கட்சிகாரர்களும், ஏனைய சமூக அமைப்புக்களும் அரசியல், கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஊரினதும், பாடசாலையினதும், முக வெற்றிலையினை காட்டும் முகமாக கலந்து சிறப்பித்தமையானது ஏனைய பிரதேசத்து மக்களுக்கு ஒரு வரலாற்று படிப்பினையாகவும், முன்மாதிரியான விடயமாக அமைந்திருந்தது என தனது ஓட்டமாவடி தேசிய பாடசலையின் நூற்றாண்டு விழாவிற்காக வாழ்ந்து செய்தியில் மேற்கண்டவாறு தெரிவித்தார் நாபீர் பெளண்டேசன் இஸ்தாபக தலைவர் பொறியலாளர் அல்-ஹாஜ் நாபீர். 

Comments