உலக நுகர்வோர் உரிமைகள் தினம்: ஜனாதிபதி பிரதம அதிதி
கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கீழ் பாவனையாளர் அதிகார சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார்.
அதிதிகளாக தொலைத்தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோவும் கைத்தொழில் மற்றும் வணிக இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாசவும் கலந்து கொள்வதாக பாவனையாளர் அதிகார சபையின் தலைவர் ஹஸித திலகரத்ன தெரிவித்தார்.


Comments
Post a Comment