மூதூர் தள வைத்தியசாலைக்கு சீன பிரதிநிதிகள் விஜயம்
மூதூர் தள வைத்தியசாலைக்கு புதிய சுகாதார கட்டித்தொகுதியொன்றை சீன அரசாங்கத்தின் உதவியுடன் அமைப்பதற்கான கலந்துரையாடலொன்று இன்று 04 சனிக்கிழமை மூதூரில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் முன்னால் கிழக்கு மாகாண சபை தவிசாளர் சட்டத்தரணி எச்.எம்.எம்.பாயீஸ் உட்பட மூதூர் தள வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் பிரேம்,டெங்கு ஒழிப்பு பணிப்பாளர் வைத்தியர் தௌபீக் மற்றும் சீன நாட்டு பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.


Comments
Post a Comment