பேருவளையை எரியூட்டி அல்லாஹ் வின் பெயரை சொல்லி நிகழ்த்திய கழுத்தறுப்பு தான் ஆட்சி மாற்றம்
அஸ்மி அப்துல் கபூர்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசுக்கும் முஸ்லீம்களுக்கும் என்ன குழப்பம் இருந்தது இரண்டு தடவை அவரை ஜனாதிபதி ஆக தெரிவு செய்ய நாம் பெருவாரியான ஆதரவு நல்கவில்லை.
ரவூப்ஹக்கீம் ரணிலிடமும் சரத் பொன்சேகாவுடனும் அழைத்து சென்றார்.
வடக்கு கிழக்கு மாகாணத்தில் நிலவிய கொடுர யுத்தத்தை நிறைவு செய்தார்.
வடக்கு கிழக்கை பிரித்தார். பல பள்ளிவாயல்களை நிர்மாணித்தார்.
இருந்தும் என்ன நடந்தது?
தீடீரென பொதுபலசேனா என்கின்ற அமைப்பு வெளிவருகிறது,
தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம்
ஹலால் ஹராம் விவகாரம்
பர்தா விவகாரம்
பள்ளிகளுக்கு கல் எறி
பேருவளை அழுத்கம பிரதேசத்தில் மிகப் பெரிய கலவரம்
தாஜூதீன் கொலை
வில்பத்து
இவ்வளவும் இடம் பெறும் போதும் அனைத்து முஸ்லீம் தலைவர்களும் அரசுடன் இருக்கின்றனர்.
சம்பிக ரணவக அரசின் உள்ளே இருந்து கொண்டு மிகப் பெரிய ஆதரவை பொதுபல சேனாவுக்கு வழங்குகிறார்கள்.
முஸ்லிம்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டு அவர்களின் உணர்வுகள் மேலோங்கி அரசுக்கெதிராக அணி திரட்டப்படுகிறார்கள்.
இப்போது மகிந்த அரசுக்கு எதிராக ஏற்கனவே ஒழுங்கு படுத்த பட்ட அணி வெளியேறுகிறது
1.சந்திரிகா
2.ராஜித
3.சம்பிக
4.தமிழ் தேசிய கூட்டமைப்பு
5.ரணில்
6.ஹிருணிகா
7.அர்ஜூனா
8.எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன
9.ரவூப் ஹக்கீம்
10.ரிசாட்
11.ஆசாத் சாலி
12 நல்லாட்சி ம.முண்ணணி
13. JVP
14.துமிந்த திசாநாயகா
முஸ்லிம்களின் கிட்டத்தட்ட நூறு சதிவிகித வாக்குகளுடன் இடம் பெற்ற மாற்றம். சந்திரிகா தனது அரசியல் எதிரியான மகிந்தவை தோற்கடித்தார்.
ராஜித தனது அதிபர் கனவை நிறைவேற்றும் வெள்ளோட்டம் சுகாதார அமைச்சை பெற்றார்.
சம்பிக ரணவக நகர அபிவிருத்தி கொழுப்பு திட்டமிடலையுயும் பெற்று தனது இன வாத வேலைகளை கச்சிதமாக செய்து கொண்டிர்க்கிறார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு இது தான் இந்த நாட்டை ஆள்கிறது. டயஸ்போராவினதும்
நோர்வேயுடனும் மிக நெருக்கமான தொடர்பில் உள்ள இவர்கள் மீண்டும் வடக்கு கிழக்கை இணைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளமையும் அவர்களின் ஒவ்வொரு விடயத்தையும் கோடிட்டு காட்டலாம்.
ரணில் பிரதமர் ஆனார்.
ஹிருணிகா பா.உ ஆனார் அவருடைய அரசியல் எதிரி துமிந்த பழிவாங்கப்பட்டார்.
அர்ஜூனா முழு அமைச்சனார்.
எம்கேடிஎஸ் தகுதியான சிரேஷ்ட காணி அமைச்சை எடுத்தார் மரணித்த பின்னர்
ஏற்கனவே சர்வதேச அஜன்டாவோடு இருந்த சரத் பொன்சேகா உள்வாங்கப்பட்டு அமைச்சர் ஆனார்.
ரவூப் ஹக்கீம் 300மில்லியன் பணத்தையும் தகுதியான அமைச்சுகளையும் பெற்றார்.
ரிசாட் ஏற்கனவே இருந்த அமைச்சுதான் வேண்டும் என கேட்டு பெற்றார்.
நல்லாட்சிக்காக மக்கள் முண்ணணி மு.காங்கிரஸ் தேசிய பட்டியலை நம்பி ஆசாத் சாலி போல் தலையை நெருப்பு கொள்ளியால் சொறிந்தவர்கள்.
துமிந்த திசாநாயக தனது தந்தை பழிவாங்கப்பட்டதற்க்கெதிராக இன்று சு.க.செயலாளராகவும் முழு அமைச்சராகவும் இருக்கிறார்.
JVP கடந்த அரசின் ஊழலை உள்ளே அடைக்கிறார்கள். இந்த அரசின் சிலரிலும் கை வைப்பார்கள்.
இவை எல்லாம் நிகழ்ந்து இருக்கிறது. ஆனால் முஸ்லீம்களுக்கெதிரான அடக்குமுறைகளும் அராஜகமும் குறைந்திருக்கிறதா?
பள்ளிகளுக்கு என்ன நடக்கிறது?
வில்பத்துவுக்குள் என்ன நடக்கிறது?
பேருவளை அழுத்கம நிகழ்வுக்கு என்ன நடந்தது?
காரணமான ஞானசாரவை நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்களா?
நீதிமன்ற தீர்ப்பு என்பதை கிழித்தெறிந்தவனை நீதியமைச்சர் சந்தித்து சமானாக பேசுகிறார்
வசீம் தாஜூதீன் கொலை என்ன முடிவு?
தம்புள்ளை பள்ளியின் அநீதி குறித்து யாரும் பேசவில்லை.
இன்று ஆட்சியை உருவாக்கிய நமது சமுகம் அபிவிருத்தி வேண்டுமென்றாலும் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டி இருக்கிறது.
நுரைச்சோலை கரும்பு
வட்டமடு பூமி
நுரைச்சோலை வீடு
தம்புள்ளை பள்ளி
கிண்ணியா வைத்தியசாலை தரமுயர்வு
வில்பத்து
மட்டக்களப்பில் சாராய கம்பனி
அனைத்துக்கும் போராட்டம் நடத்த வேண்டி இருந்தால் அல்லாஹ் வின் பெயரை சொல்லி அப்பாவி சனங்களை ஏமாற்றி ஏன் இவ்வாறு நடந்து கொண்டீர்கள்?
உண்மை உரைத்த தலைவர்களை சர்வதேசத்தின் திட்டத்துக்கு கீழ் இறங்க மாட்டார்கள் என தெரிந்து தோற்கடித்திருக்கிறீர்கள்.
தமது சொந்த நலனை வெற்றி கொண்ட நல்லாட்சி முஸ்லிம்களின் உணர்வுகளை கருவறுத்திருக்கிறது.


Comments
Post a Comment