நீதிமன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் அதிரடி மீட்பு!


தாக்குதல் ஒன்றை நடத்துவதற்காக கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிகளும், தோட்டாக்களும் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, பை ஒன்றிலிருந்து குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, சீனாவில் தயாரிக்கப்பட்ட 2 கைத்துப்பாக்கிகளும், 10 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, நீதிமன்ற நடவடிக்கைகள் நிறுத்திவைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் இருந்தவர்கள் அங்கேயே தடுத்து வைக்கப்பட்டனர்.

பின்னர் மோப்ப நாய்கள் கொண்டுவரப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Comments