ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபர் ஜுனைட் புறக்கணிக்கப்படவில்லை.. பாடசாலை நிருவாகம்.
(ihzana fareed)
நூற்றாண்டினை கொண்டாட இருக்கும் ஓட்டமாவடி தேசிய பாடசலையின் வளர்ச்சி படியில் பெரும்பங்காற்றி கடந்த வருட நடுப்பகுதியில் கோட்டக்கல்வி பணிப்பாளராக பதவி உயர்வு பெற்று சென்ற முன்னாள் அதிபர் அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.ஜுனைட் நூற்றாண்டு விழா சம்பந்தமாக் இடம் பெற்ற நிகழ்வுகளான பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப்போட்டி ,
மற்றும் BACK TO SCHOOL நிகழ்வுகளுக்கு அதீதியாகயாகவோ அல்லது கலந்துகொள்வதற்கோ அழைக்கப்படவில்லை என பல ஊகங்கள் உடனான விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருக்கின்றது.
அதிலும் முக்கியமாக முன்னாள் அதிர் அல்-ஹாஜ் ஜுனைடினுடைய புதல்வன் சுஹைல் தனது முகநூல் பக்கத்தில் நூற்றாண்டு விழா சம்பந்தமாக இடம் பெற்றுகின்ற நிகழ்வுகளுக்கு தனது தந்தை அழைக்கப்படாமை தொடர்பாக கீழ்வருமாறு தனது கவலையினை வெளியிட்டிருந்தார்.
BACK TO SCHOOL பற்றி மிக மகிழ்ச்சியுடன் தங்களது நினைவுகளை பரிமாறிக் கொள்ளும் ஒரு தருனம். ஏன் நான் கூட இந்த சந்தர்ப்பத்தை தவற விட்டதை ஏதோ ஒரு குடும்ப விஷேசத்தை தவறவிட்டது போல் என்னிக்கொன்டிருக்கிறேன்.
இவ்வேளையில் இன்று விட்டில் உள்ளவர்களுடன் உரையாட தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட நான் முதலாவது விணவியது எனது உம்மாவிடம் "வாப்பாவை ஒரு போட்டேவிலும் காணவில்லை ஏன் ஏதாவது சுகயீனமா?" என்று, உடனே அழைப்பு
தந்தையிடம் மாற்றப்பட அவர் என்னிடம் கூறிய பதில் என்னை மிகவும் மனவுளைச்சளுக்கு உள்ளாக்கியது, ஏன் என்றால் இந்த பாடசாலையில் கிட்டத்தட்ட 10 வருடங்களாக அதிபராக கடமையாற்றியது மட்டுமல்லாமல் இந் நூற்றான்டு விழாவுக்கான பல அடித்தளங்களை அவர் இட்டிருந்தார் இருந்த போதும் இந் நூற்றான்டு விழாவில் ஒரு பங்கான Back_To_School நிகழ்வுக்கான ஒரு சாதாரண அழைப்புக்கூட கிடைக்கவில்லை என்பது.
நான் இதனை மனதளவில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாக கருதுகிறேன். அத்துடன் எனது மனதளவில் வைத்துக்கொள்ள முடியாமையால் இவ் ஆதங்கத்தை ஒரு சிறு பதிவாக இடுகிறேன். காலம் ஒன்றே பதில் சொல்லும். என தனது கவலையினை சுஹைல் வெளியிட்டிருந்தார். அது பரவலாக பலராலும், பலவகையிலே திரிவுபடுத்தப்பட்டு பாடசாலை நிருவாகத்தினை விமர்சிக்கும் விடயமாக மாற்றமடைந்துள்ளது.
அந்த வகையிலே படசலையின் அதிபர். அல்-ஹாஜ் ஹலீம் இஷ்ஹாக்கின் கீழ் இயங்கும் பாடசாலை நிருவாகம் குறித்த விடயம் சம்பந்தமாக தெளிவு படுத்தும் வகையில் கீழ் உள்ள அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
மதிப்பிற்குறிய ஜுனைட் சேர் (முன்னாள்) அதிபர் அவர்கள் பாடசாலையின் நூற்றாண்டினை முன்னிட்டு நடாத்தப்பட்ட
பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கட் போட்டி மற்றும் BACK TO SCHOOL நிகழ்வுகளுக்கு வருகை தராமை தொடர்பாக முகநூல்களிலும், WhatsApp களிலும் வெளியிடப்படும் கருத்துக்களுக்கு பாடசாலை நிருவாகத்தின் விளக்கம். என்ற தலைப்பில்…..
மாவட்ட பாடசலைக்களுக்கிடையிலான கிரிக்கட் போட்டிக்கு விஷே.ட அதிதியாக அவரை அழைத்திருந்தோம். எனினும் அன்றைய தினம் (18.03.2017) கொழும்பு செல்வதாக அறிவித்து விட்டு சென்றிருந்தார். இதுவே அன்றைய நிகழ்வுக்கு அவர் வராமைக்கான காரணம் ஆகும்.
மறு நாள் (19.03.2017) இடம் பெற்ற BACK TO SCHOOL நிகழ்வுக்கு விசேட சொற்பொழிவினை நிகழ்த்துமாறு கோரினோம். எனினும் மதிப்பிற்குரிய சேர் அவர்கள் உடன்பாடு தெரிவிக்கவில்லை. அத்துடன் தொடர்பாடல் புரிந்துணர்வில் ஏற்பட்ட பிரச்சனையும் காரணமாக இருந்துள்ளது.
இது விடயம் தொடர்பில் பாடசாலை நிர்வாகம் கலந்துரையாடியதன் அடிப்படையில் தனக்கும் பாடசலைக்கும் எதுவித பிரச்சனைகளும், இல்லையென்பதையும், நூற்றாண்டு நிகழ்வுகளில் தான் பூரண ஒத்துளைப்பினை வழங்குவதாகவும் உறுதியளித்தார் என்பதனை ஊடகங்களுக்கு அறியத்தருகின்றோம்.
எனவே இது தொடர்பில் தேவையற்ற ஊகங்களை தெரிவிக்க வேண்டாம் என்பதனை பொறுப்புடன் தெரிவித்து கொள்கின்றோம். இப்படிக்கு பாடசாலை நிருவாகம்.. என்ற மேற்கண்ட கருத்துகளுடன் ஓட்டமாவடி தேசிய பாடசலையின் அதிபர் அடங்கிய நிருவாகம் தனது மறுப்பறிக்கையினை ஊடகங்களுக்காக தெளிவுபடுத்தியுள்ளது.





Comments
Post a Comment