திருகோணமலை கந்தளாய் வீதியில் கார் ஒன்றுடன் மற்றும் ஒரு வான் மோதியதில் ஒருவர் பலியானதுடன், இருவர் காயமடைந்தனர்.


(ihzana fareed)

திருகோணமலை கந்தளாய் வீதியில் கார் ஒன்றுடன் மற்றும் ஒரு வான் மோதியதில் ஒருவர் பலியானதுடன், இருவர் காயமடைந்தனர். இச்சம்பவம் இன்று (10) வெள்ளிக்கிழமை அதி காலை 03;00மணியலவில் கந்தளாய் 93ம் மைல்கள் எனும் இடத்தில் இடம்பெற்றதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்தில் உயிரிழந்தவர் முள்ளிப் பொத்தானையைச் சேர்ந்த அலிகான் நௌபல்கான் என்பவராவர். இவர் தி/கிண்ணியா/ஹமீதியா முஸ்லிம் வித்தியாலய ஆசிரியர் என்பதுடன் இரண்டு பிள்ளைகளின் தந்தையுமாவார் . இவரின் பிரதம் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் கந்தளாய் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வாருகின்றனர்.

Comments