பாராளுமன்ற வளாகத்தில் விமலின் பிறந்தநாள் கொண்டாட்டம்!
கைது செய்யப்பட்டு விளக்க மறியலிலிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இன்று தனது 47 வது பிறந்த நாளை பாராளுமன்ற வளாகத்தில் கேக் வெட்டி மிகச் சிறப்பாகக் கொண்டாடினார்.
இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் விமல் வீரவங்சவின் மனைவி, பிள்ளைகள் கலந்து கொண்டுள்ளனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் விமல் வீரவன்ச, நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதியிருக்கின்ற போதிலும் பிறந்த நாள் கொண்டாட்டம் சட்டத்துக்கு முரணானது என விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment