(வீடியோ).,ஓட்டமாவடியுடன் வாழைச்சேனையை இணைப்பதே எங்களுடைய திட்டமாக இருந்தது.. முன்னாள் போராளி சலீம் கான்.

(ihzana fareed)

நான் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே போராளியாகவும் அஷ்ஷஹீட் அஸ்ரஃப் அவர்களுடைய பங்காளியாகவும் இருந்து வந்துள்ளேன். இன்றும் போராளியாகவே இருக்கின்றேன். ஜுனைட் ஆசிரியர், கிராம சேவையாளர் அஹமட், ஆர்.டி.ஓ கலீல், உட்பட நாங்கள் எல்லோரும் போராளிகளாக அன்று இருந்தாலும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவை ஆதரிப்பவர்களாகவே இருந்தோம். கடந்த 2000ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் ஹிஸ்புல்லாவிற்கே வாக்களித்தோம். அதற்கு பாரிய சமூக சிந்தனையுடனான காரணம் எங்களிடத்தில் இருந்தது.

அன்று இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவிடன் கல்குடா சமூகம் பற்றிய பாரிய தூர நோக்கு சிந்தனையுடனான திட்டம் காணப்பட்டது. அதாவது 2000ம் ஆண்டில் வாழைச்சேனை முஸ்லிம் பிரதேசத்தினை தனியாக பிரிக்காமல் ஓட்டமாவடி பிரதேச சபையுடன் இணைத்து ஓட்டமாவடி பிரதேச சபையினை நகர சபையாக மாற்றி சகல பிரதேசத்து முஸ்லிம்களையும் ஒன்றிணைத்து வைக்கும் ஹிஸ்புல்லாவின் தூர நோக்கு சிந்தனையுடனான நோக்கமே அன்று நாங்கள் ஹிஸ்புல்லாவினை ஆதரிப்பதற்கான முக்கியகாரணமாக அமைந்திருந்தது.

அன்று மட்டுமல்ல இன்றும் அது எங்களுக்கு ஒரு சிறந்த திட்டமாகவே இருக்கின்றது ஆகவேதான் நாங்கள் அன்று சமூக நோக்கத்திற்காக ஹிஸ்புல்லாவினை ஆதரித்தோம் என ஒரு வரலாற்று ரீதியான உண்மையினை விளக்கினார் முன்னாள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் போராளியும் பெரும் தலைவர் அஸ்ரஃப் அவர்களுடைய பங்காளியுமான சலீம் கான்.

கல்குடா பிரதேசத்தில் முஸ்லிம் சமூகம் எதிர் நோக்குகின்ற பிரச்சனைகள் சம்பந்தமாக கல்குடாவில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் தோலோடு தோல் நின்று முஸ்லிம் காங்கிரசிற்காக உழைத்த போராளிகளின் ஒன்று கூடல் நிகழ்விலேயே மேற்கண்டவாறு சலீம் கான் தெரிவித்தார். மேலும் ஒன்று கூடலிம் இடம் பெற்ற நிகழ்வுகளின் காணொளி எமது இணைய வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Comments