முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் உலமா சபை மு.கா.வுடன் சந்­திப்பு


முஸ்லிம் தனியார் சட்­டத்தில் விவாக, விவா­க­ரத்து தொடர்­பான விதி­மு­றை­களில் திருத்­தங்­களை மேற்­கொள்­வது தொடர்­பாக அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா முஸ்லிம் காங்­கி­ரஸை சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­லொன்றை மேற்­கொண்­டுள்­ளது. 

இதன்­போது தனியார் சட்ட திருத்தம் தொடர்­பி­லான முக்­கிய விட­யங்கள் இரு தரப்­பி­ன­ராலும் பரஸ்­பரம் பிரஸ்­தா­பிக்­கப்­பட்­டுள்­ளன. 

இச்­சந்­திப்பு நேற்று முன்­தினம் மு.கா. தலை­மை­ய­க­மான தாருஸ்­ஸ­லாமில் இடம்­பெற்­றது. 

இச்­சந்­திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வ­ர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், மு.கா. பிரதி செய­லாளர் நாயகம் சட்­டத்­த­ரணி நிஸாம் காரி­யப்பர், கட்­சியின் வெளி­நாட்டு விவ­கார பணிப்­பாளர் சட்­டத்­த­ரணி ஏ.எம். பாயிஸ் ஆகி­யோரும் ஜம்­இய்­யத்துல் உலமா சார்பில் பொதுச் செய­லாளர் மௌலவி எம்.எம்.ஏ. முபாறக், பொரு­ளாளர் மௌலவி ஏ.எல்.எம். கலீல், உதவி பொதுச் செய­லா­ளர்­க­ளான மௌலவி எம்.எஸ்.எம். தாஸீம், மௌலவி முர்ஷித், நிறை­வேற்­றுக்­குழு உறுப்­பி­னர்­க­ளான மௌலவி எஸ்.எல். நௌபர், மௌலவி முஹம்மட் பவாஸ் ஆகி­யோரும் கலந்­து­கொண்­டனர்.

இச்­சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், முஸ்லிம் தனியார் சட்­டத்தில் விட்­டுக்­கொ­டுப்­பு­களை செய்­யும்­போது பல பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ள வேண்­டி­யேற்­படும். திரு­மணம் முடித்­த­வர்­க­ளுக்கு சரி­யா­ன­தொரு ஒழுக்­கக்­கோ­வையே அமைத்­துக்­கொ­டுக்க வேண்டும் என தெரி­வித்­துள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது,
முஸ்லிம் தனியார் சட்­டத்தில் சர்ச்­சை­க­ளாக இருக்­கின்ற பிரச்­சி­னை­க­ளுக்கு அப்பால், தீர்க்­கக்­கூ­டிய பிரச்­சி­னை­க­ளுக்கு முதலில் இனம்­கண்டு அதனைத் தீர்க்­க­வேண்டும். அதே­வேளை, முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் முன்­வைக்­கப்­படும் பிரச்­சி­னை­களை எவ்­வாறு தீர்­வு­காண்­பது என்­பது தொடர்பில் முதலில் கவனம் செலுத்­த­வேண்டும். வறுமை கார­ண­மா­கவே அதி­க­ளவில் இள­வ­யது திரு­ம­ணங்கள் நடக்­கின்­றன. அதனை நிவர்த்­திக்கும் வழி­மு­றை­களை தேட­வேண்டும் என்று குறிப்­பிட்டார்.

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்ள நிலையில், அதற்கு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவும் இணக்கம் தெரி­வித்­துள்­ளது. ஆனால், அந்த திருத்­தங்கள் ஷரீஆ சட்­டத்­துக்கு முரண்­ப­டாத வகையில் இருந்தால் மாத்­தி­ரமே, அதற்கு அனு­ம­தி­ய­ளிப்­பது என்ற நிலைப்­பாட்டில் உறு­தி­யாக இருப்­ப­தாக உலமா சபை இதன்­போது சுட்­டிக்­காட்­டி­யது.

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் கட்­டாயம் திருத்­தங்­களை மேற்­கொள்ள வேண்­டு­மென சில மகளிர் அமைப்­புகள் சார்­பிலும், சில பெண்­ணியல் செயற்­பாட்­டா­ளர்கள் சார்­பிலும் கோரிக்­கைகள் விடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இதற்கு பதி­ல­ளிக்கும் வகை­யிலும், உலமா சபை மேற்­கொள்ள தீர்­மா­னித்­தி­ருக்கும் விட­யங்­களை தெளி­வு­ப­டுத்தும் வகை­யிலும் தயா­ரிக்­கப்­பட்­டுள்ள ஆவ­ண­மொன்று அமைச்சர் ரவூப் ஹக்­கீ­மிடம் உலமா சபை­யினால் கைய­ளிக்­கப்­பட்­டது.

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் உலமா சபை மேற்­கொள்­ள­வுள்ள திருத்­தங்­களை அர­சி­யல்­வா­திகள் மூலம் அர­சாங்­கத்­துடன் பேசு­வ­தற்கும், மக்கள் மத்­தியில் கொண்­டு­செல்­வ­தற்கும் தீர்­மா­னித்­துள்­ள­தாக உல­மா­சபை பிர­தி­நி­திகள் தெரி­வித்­தனர்.

இந்த திருத்தம் தொடர்­பாக எமது நிலைப்­பாட்டை பாரா­ளு­மன்­றத்தில் பேசு­மாறு அமைச்சர் ரவூப் ஹக்­கீ­மிடம் உலமா சபை கோரிக்கை விடுத்­தது.

திரு­மண வய­தெல்­லையில் கட்­டுப்­பாடு, பெண் காதி­களை நிய­மித்தல், பெண் பதி­வா­ளர்­களை நிய­மித்தல், வலி இல்­லாமல் பெண்ணின் விருப்­பத்­துடன் திரு­மணம், பல­தார திரு­மண கட்­டுப்­பாடு போன்­ற­வற்றை தனியார் சட்­டத்தில் திருத்­து­மாறு கோரிக்­கைகள் விடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

திரு­மண வய­தெல்லை என்ற விட­யத்தில், பரு­வ­ம­டைந்­ததும் திரு­மணம் செய்­து­கொள்ள இஸ்லாம் அனு­ம­தித்­துள்­ளது. 18 வய­துக்­குட்­பட்­ட­வர்கள் திரு­மணம் முடிப்­ப­தற்கு தடை என்று நிபந்­தனை விதிக்­காமல், 18 வய­துக்கு மேற்­பட்­ட­வர்கள் திரு­மணம் முடிக்­கலாம் என்று சிபார்சு செய்­யப்­பட்­டது. இதே­வேளை, பரா­ம­ரிப்­ப­தற்கு ஆளில்­லா­த­வர்கள், சொத்­து­களை கையாள்­வ­தற்கு உரிய வயதை அடை­யா­த­வர்கள் என்று 18 வய­துக்­குட்­பட்­ட­வர்கள் திரு­மணம் முடிப்­பதை தடை­செய்ய முடி­யாது என்றும் வலி­யு­றுத்­தப்­பட்­டது.

2011 –- 2016 வரை­யான காலப்­ப­கு­தியில் 14,737 பேரிடம் நடத்­தப்­பட்ட ஆய்வில் 5 சத­வீ­த­மானோர் மாத்­தி­ரமே 17 வய­துக்­குட்­பட்ட வயதில் திரு­மணம் முடித்­துள்­ளனர். புத்­த­ளத்தில் இடம்­பெ­யர்ந்தோர் அதி­க­ளவில் வாழ்­வ­தி­னாலும், வறுமை கார­ண­மா­க­வுமே அப்­ப­கு­தியில் அதி­க­ளவில் இள­வ­யது திரு­ம­ணங்கள் நடப்­ப­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டன. அதே­வேளை, இலங்­கையில் ஒரு நாளைக்கு 16 வய­துக்கு குறைந்த 6 பேர் சரா­ச­ரி­யாக பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக புள்ளிவி­ப­ரங்கள் கூறு­கின்­றன.

இந்­நி­லையில், திரு­மண வய­தெல்­லையை அதி­க­ரிக்க முடி­யா­தென உலமா சபை வலி­யு­றுத்­தி­யது.

அத்­துடன், பெண்கள் தரப்பு பிரச்­சி­னை­களை பேசு­வ­தற்­காக காதி நீதி­ப­தி­க­ளுக்கு துணை­யாக பெண்­களை நிய­மித்தல், பள்­ளி­வா­சல்­களை அண்­டி­ய­வாறு திரு­மணம் சம்­பந்­த­மான பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்­கான ஒரு மத்­திய நிலை­யத்தை ஸ்தாபித்தல், தலாக் சொல்­லப்­பட்ட பெண்களுக்கான வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல், திருமண பதிவாளர்களுக்கான விழிப்புணர்வூட்டல் போன்ற பல கோரிக்கைகள் உலமா சபையினால் முன்வைக்கப்பட்டன.

மகளிர் தொடர்பான விவகாரங்களை கையாள்வதற்காக ஜம்மிய்யத்துல் உலமாவில் விசேட பிரிவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றின்மூலம் விவாகம் மற்றும் விவாகரத்தினால் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறிமுறையொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதன்மூலம் பல பெண்களுடைய வாழ்க்கைகள் சேர்த்துவைக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டது.

Comments