வசீம் தாஜுதீனின் படு­கொ­லை­யை மூடி மறைக்க அரசாங்கம் முயற்சி

சபையில் ஜே.வி.பி குற்றச்சாட்டு

வசீம் தாஜுதீன், லசந்த விக்­கி­ர­ம­துங்க, பிரகீத் எக்­ன­லி­ய­கொட ஆகி­யோரை படு­கொலை செய்­த­வர்­களை மூடி­ம­றைப்­ப­தற்கு அர­சாங்கம் பெரும் முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­வ­தாக மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­வரும் , எதிர்க்­கட்­சியின் பிர­தம கொற­டா­வு­மான அநுர குமார திஸா­நா­யக்க தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இலஞ்ச அல்­லது ஊழல் மோசடி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் இலஞ்சம் தொடர்­பான திடீர் சோதனை முற்­பண வரை­ய­றையில் திருத்தம் மேற்­கொள்ளல் தொடர்­பான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெர­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,
நாட்டில் ஊழல் மோச­டிக்­கார்­களை தண்­டிப்­ப­தாக கூறி  ஆட்­சிக்கு வந்­த­வர்கள்  மக்கள் ஆணையை மீறி செயற்­ப­டு­கின்­றனர். மோசடிக் காரர்­க­ளுக்கு எதிராக சட்ட நட­வ­டிக்கை எடுக்க வந்­த­வர்கள் மோச­டி­களை மூடி மறைக்­கின்­றனர். 

இலஞ்சம் அல்­லது  ஊழல் விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் முன்னாள் ஆணை­யாளர் தில்­ருக்ஷி விக்­கி­ர­ம­சிங்க மிகவும் நேர்­மை­யாக செயற்­பட்டு வந்தார். துரித கதியில் மோச­டிக்­கா­ரர்­க­ளுக்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்தார். எனினும் அவரை நீக்­கி­விட்­டனர். இவர் மீது பாலியல் ரீதி­யான குற்­றச்­சாட்­டு­களை செய்­தனர். ஏனெனில் தற்­போது அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக விசா­ரணை செய்த­மைக்­கா­கவே இவ்­வாறு செயற்­பட்­டனர்.

எனினும் தற்­போது நல்­லாட்சி அர­சாங்­கத்­திலும் மோச­டிகள் நடக்­கின்­றன அது­மாத்­தி­ர­மின்றி வசீம் தாஜுதீன், லசந்த விக்­கி­ர­ம­துங்க, பிரகீத் எக்­ன­லி­ய­கொட ஆகி­யோரை படு­கொலை செய்­த­வர்­களை மூடி­ம­றைப்­ப­தற்கு அர­சாங்கம் பெரும் முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

எனவே, மக்களின் ஆணையை பாதுகாக்க வேண்டும். ஊழல் மோசடிகளுக்கு எதிரான செயற்பாடுகளை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும். தராதரம் பாராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Comments