இறக்காமம் மாணிக்கமடு பிரதேசத்திற்கு மாகாண காணி ஆணையாளர் விஜயம்
எம்.ஏ.றமீஸ்
அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாணிக்கமடு பிரதேசத்தில் உள்ள மாயக்கல்லி மலை உச்சியில் கடந்த ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி குழுவொன்றினால் பௌத்த சிலை நிறுவப்பட்டதனைத் தொடர்ந்து அப்பகுதியில் அசாதாரண நிலை தொடர்ந்து கொண்டு வந்தது.
இப்பகுதியில் உள்ள காணியின் அமைவிடம் மற்றும் இதன் உண்மைத்தன்மை ஆகியவற்றினை அறிந்து அதற்கான தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அநுர தர்மதாச தலைமையிலான குழுவினர் அப்பகுதிக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டனர்.
இக்குழுவினருடன் கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, இறக்காமம் உதவிப் பிரதேச செயலாளர் பாத்திமா நஹீஜா உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள், பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இறக்காமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது, குறிப்பிட்ட மலையினை அண்டியுள்ள பிரதேசத்தினைச் சேர்ந்த காணி உரிமையாளர்கள் தமது நியாயங்களையும் ஆதாரங்களையும் முன்வைத்தனர்.
இப்பிரதேசத்தில் நீண்ட காலமாக காணி உரிமைப் பத்திரம் வைத்திருந்த காணி உரிமையாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் போன்றோரின் கோரிக்கைகளையும் கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்ட கிழக்கு மாகாண காணி ஆணையாளர், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் மிக விரைவில் சமாதானமான முறையில் கலந்துரையாடி தீர்வினைப் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் அதுவரையில் இப்பிரதேசத்தில் நிர்மாணப்பணிகள் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமலிக்குமாறும் வேண்டிக்கொண்டார்.
குறித்த மாணிக்கமடு மாயக்கல்லி மலை சுற்றுவட்டாரத்தினையும் இக்குழுவினர் பார்வையிட்டதுடன் இதனை அண்டிய பகுதியில் நீண்டகாலமாக விவசாயச் செய்கையினை மேற்கொண்டு வந்த சம்மாந்துறைப் பிரதேச விவசாயக் காணியினையும் இக்குழுவினர் பார்வையிட்டனர்.
இதற்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளை தாம் மேற்கொள்வதாக மாகாண காணி ஆணையாளர் தெரிவித்தார்.

Comments
Post a Comment