முச்சக்கரவண்டியொன்றில் இருந்து வீழ்ந்த ஆரம்ப பாடசாலை குழந்தை பரிதாப பலி!

முச்சக்கரவண்டியொன்றில் இருந்து வீழ்ந்த ஆரம்ப பாடசாலை குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

இன்று காலை 8 மணியளவில் கலவான ரதெல்ல பிரதேசத்தின் வீதியில் பயணித்த முச்சக்கரவண்டியில் இருந்து இந்த குழந்தை விழுந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

கீழே விழுந்த குழந்தையின் மீது முச்சக்கரவண்டியின் சக்கரங்கள் ஏறியுள்ள நிலையில் , பின்னர் பலத்த காயங்களுக்கு உள்ளான குறித்த குழந்தை கலவான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடரந்தே உயிரிழந்துள்ளது.

அவர் கலவான ஹகரங்கல பிரதேசத்தை சேர்ந்த 4 வயது குழந்தையாவார்.

சம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Comments