ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் உள்ளிட்டோர் நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும்

நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் முஸ்லிம்களை புறக்கணித்து வருகிறது.

எனவே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் உள்ளிட்டோர் அரசாங்கத்திலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு உரைாயாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

Comments