(வீடியோ).,கிழக்கு மண்ணுக்கான அரசியல் தலைமை அம்பாறை மாவட்டத்திலே இருக்க வேண்டும். நாபீர் பெளண்டேசன்.

(ihzana fareed)

சில மாதங்களுக்கு முன்னர் சாய்ந்தமருது பிரதேசத்திற்கு அமைச்சர் பைசர் முஸ்தபாவினை கொண்டு வந்து சாய்ந்தமருதிற்கு தனியான பிரதேச சபையினை பெற்றுத்தருவோம் என கூறினார்கள். எங்கே அந்த சாய்ந்தமருதிற்கான பிரதேச சபை என பெற்றுத்தருவதாக கூற வந்தவர்களிடம் நான் பகிரங்கமாக கேட்கின்றேன். அவ்வாறு அம்பாறை மாவட்டத்தில் நீங்கள் அரசியல் செய்வதென்றால் பிரதேச சபையினை வழங்கி விட்டு வாருங்கள். அதை விடுத்து பூச்சாண்டி அரசியலினை மெற்கொள்வதற்காக அம்பாறைக்கு வருவதனை நிறுத்திக்கொள்ள வேண்டும். கிழக்கு மாகான மக்களினுடைய மன நிலையினை புரிந்து கொண்டு அரசியல் செய்கின்ற சக்தியானது அம்பாறை மாவட்டத்திலும் 

கிழக்கு மண்ணிலுமே இருக்கின்றது என நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவரும் பொறியியலாளருமான அல்-ஹாஜ் நாபீர் தெரிவிக்கின்றார்.
மேலும் தனது கருத்தினை தெரிவித்த நாபீர் பெளண்டேசன்.. பல்கலை கழகங்களில் பட்டங்களை பூர்த்தி செய்தவர்களாக தங்களுக்காக அரச தொழில் வாய்ப்புக்களை தேடி வீதிகளில் போராடி வருகின்றவர்களுக்கான தீர்வு என்ன? இவர்களை பற்றி யார் சிந்திப்பது? அவர்களுக்கான நியமனங்களை யார் பெற்றுக்கொடுப்பது? இவற்றுக்கான விடைகளைதான் அரசியல் செய்பவர்கள் பெற்றுக்கொடுக்க முயல வேண்டும். அதை விடுத்து போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும் எதிர்ப்பு அரசியலினை மேற்கொள்வதனை முற்றாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

எல்லோரும் ஒன்றிணைந்து சமூகத்தினுடைய பிரச்சனைகள், பிரதேசங்களின் அபிவிருத்திகளை எவ்வாறு தீர்க்கலாம் என்பதனை பற்றி சிந்தித்து செயலாற்ற முன்வர வேண்டும்.. முஸ்லிம் காங்கிரசினுடைய தலைவர் சகோதரர் ரவூப் ஹக்கீம் மிக விரைவில் கடைசி கூட்டத்திற்கு வந்து வெளி நாட்டு சக்திகளிடம் பணத்தினை பெற்றுக்கொண்டு பேரினவாதிகள் எம்மை நசுக்குகின்றார்கள் என கூற வருவார். அவ்வாறான பூச்சாண்டி அரசியல் இனியும் கிழக்கு மாகாணத்தில், அதிலும் முக்கியமாக அம்பாறை மண்ணில் வேகாது என்பதனை அவர்களுக்கு நாபீர் பெளண்டேசன் கூறிக்கொள்ளவதோடு அடிமட்ட மக்கள் தற்பொழுது மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள் என்பதனை முதலில் அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதனை இவ்விடத்தில் ஞாபகப்படுத்துகின்றது. 

மேலும் குறித்த விடயத்தினை மையமாக வைத்து நாபீர் பெளண்டேசன் விடுத்துள்ள விரிவான விளக்கத்தின் காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

Comments