தலைவரை திருத்த போகிறேன் என்று ஊருக்கு ஊர் முதலைக் கண்ணீர் வடிக்கும் ஹசன் அலி முதலில் நீங்கள் உறுதியாய் இருங்கள்.
ஒலுவில் ஜெலில்.
பாவம் ஹசன் அலிக்கு புரிய வில்லை போல இத்தனை வருடங்களும் தலைவருக்கு பின்னால் அலைந்து திரிந்து செய்ய முடியாததை இப்போது வெளியில் வந்து ஊருக்கு ஊர் மேடை போட்டு கண்ணீர் வடித்தால் திரித்தி விடலாமா என்ன?
சகோதரர் ஹசன் அலி அவர்களே இவ்வளவு நாளும் தலைவருடன் சேர்ந்து ஆடிய நாடகம் போதும். இனி தலைவரை விட்டு வெளியில் வந்தும் மக்களை மடையராக்குவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
உங்களுடைய நோக்கமும் இலக்கும் பதவியே தவிர வேறு ஒன்றுமில்லை என்பதை நண்றாகவே விளங்கி கொள்ள முடிகிறது.
நீங்கள் உண்மையாக மக்களை நேசிப்பராக இருந்தால் எந்த பலனையும் எதிர்பார்க்க வில்லை என்றிருந்தால். இந்தளவுக்கு காலத்தை வீணடித்துக் கொண்டு கதை செல்லிக் கொண்டு இருந்திருக்க மாட்டீர்கள்.
இப்போது நீங்கள் மேடைகளில் பேசும் பேச்சுகள்(கவுண்டமணி, செந்தில்)
"வாழைப்பழ கதை போன்றுதான் இருக்கிறது"
இப்படி ஒரு கதையை மக்களுக்கு கூற விரும்பினால் கட்சியை விட்டு வெளியில் மேடை போட வேண்டிய அவசியமில்லை.
மற்றவர்கள் பாடுவது போல் தலைவரை தூக்கி சிம்மாசனத்தில் வைத்து பாடி எதிர்பார்க்கும் பதவியை பெற்றிருக்கலாம் இலகுவாக.
இது என்னடா என்றா பாம்புக்கும் நோகக் கூடாது. பாம்பு அடிச்ச கம்புக்கும் நோகக் கூடாது என்று புது புது கதைகள் செல்லுகிறீர்கள்.
என்ன புராணம் கூறினாலும் அந்த தலைமை ஒரு நாளும் திருந்தாது இந்த ஜென்மத்திலும் நடக்காது.
முடிவே எடுத்து விட்டீர்கள் கட்சியை பிழையான பாதையில் நடத்திக்கொண்டு, சமூகத்தை பாதள குழியில் தள்ளிக் கொண்டிருக்கிறார் அதன் தலைமை ஹக்கீம் என்று.
ஆகவே இனி என்னத்துக்கு இந்த வேசம் உங்களுக்கு? "சேற்றில் நட்டப்பட்ட கம்பு போல் இல்லாமல்" உறுதியுடன் உண்மையை உரக்க செல்லுங்கள்.
மக்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள் அதுவே நேர்மையான வழியும் கூட. எனவே தலையை சுத்தி மூக்கை தொடாமல் நேரடியாகவே விடயத்தை கூறுங்கள்.
நாங்கள் உங்களை மதிக்கிறோம் ஆனால் மக்களை கோமாளிகளாக நினைக்காதீர்கள். நாங்கள் விழிப்படைந்து மிச்ச நாளாச்சு.
சமுகத்துக்காக உழைத்த தலைவர்கள் இருந்தார்கள் அன்று.
ஆனால் தனக்காக மட்டும் உழைக்கும் தலைவர்களே இன்று வலம் வருகிறார்கள் என்பதே உண்மை.
உண்மை ஒரு நாளும் அழிவதில்லை.


Comments
Post a Comment