வடக்கில ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு ஆசிரியர் நியமனம்!


வட மாகாண பட்டதாரிகள் 549 பேருக்கும், 480 ஆசிரியர் கலாசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம்  இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

வடமாகாண ஆசிரியர் சேவையில் பட்டதாரிகளையும், ஆசிரியர் கலாசாலை ஆசிரியர்களையும் உள்ளீர்ப்பு செய்வதற்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் காலை யாழ்ப்பாணம் இந்து மகளீர் கல்லூரியில் நடைபெற்றது.

இதன்போது 549 பட்டதாரிகளுக்கும், 480 ஆசிரியர் கலாசாலை ஆசிரியர்களுக்கும் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜர், வட மாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments