ஹெல்மட்: மீண்டும் ஞாயிறன்று ஆர்ப்பாட்டம்


மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் குறித்து அண்மையில் வெளியான சுற்று நிருபத்துக்கு எதிராக ஞாயிறன்று காலிமுகத் திடலில் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் சங்கம்.

புதிய சுற்றுநிருபத்தின் அடிப்படையில் முகம் மூடப்படாத வகையில் பாதுகாப்பு தலைக்கவசம் அணியப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே தமக்கு முழு முகத்தையும் மூடும் வகையிலான தலைக்கவசம் அணியும் உரிமை வேண்டும் என கோரி இவ்வார்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments